அமெரிக்கா இனி வேண்டாம்.. இந்திய ஐடி ஊழியர்களே உடனே தாய்நாட்டுக்கு வாங்க - ஸ்ரீதர் வேம்பு அழைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: காக்னிசண்ட், இன்போசிஸ், டாடா, விப்ரோ, கேப்மெஜினி, எச்சிஎல் உள்பட 8 'டாப்' நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் அமெரிக்கா சென்று பணியாற்றுவதற்கான திட்டமான PERM-யில் இருந்து அந்த நாடு சஸ்பெண்ட் செய்துள்ளது. இதனால் இந்திய ஐடி ஊழியர்களின் அமெரிக்க பணி கனவாக மாறலாம் என்ற நிலையில் ஜோஹோ நிறுவனத்தில் ஸ்ரீதர் வேம்பு அமெரிக்காவில் உள்ள இந்திய ஐடி ஊழியர்களுக்கு முக்கிய அழைப்பை விடுத்துள்ளார்.

us-green-card-freeze-america-no-longer-wants-us-come-back-and-lets-build-india-says-sridhar-vemb

அமெரிக்க அதிபராக டொனல்ட் டிரம்ப் 2வது முறைய பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இவர் தேர்தல் பிரசாரத்திலேயே அமெரிக்காவில் உள்ள வேலைகளில் அமெரிக்கர்களுக்கு தான் முன்னுரிமை என்று கூறி வருகிறார்.

இதனால் வெளிநாட்டில் இருக்கும் அமெரிக்காவிற்கு பணியாற்ற செல்வோரை கட்டுப்படுத்த விசா கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் அடுத்தக்கட்டமாக Permanent Labour Certification எனும் PERM திட்டத்தில் டிரம்ப் அரசு கைவைத்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தான் வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான கிரீன்கார்டுக்கு விண்ணப்பம் செய்யலாம். குறிப்பிட்ட நிறுவனத்தில் பணி செய்ய தகுதியான அமெரிக்கர்கள் இல்லை என்பதை காரணம் காட்டி வெளிநாட்டினரை வேலைக்கு எடுத்து இந்த திட்டத்தில் 'கிரீன்கார்டு' விண்ணப்பம் செய்யலாம்.

இந்நிலையில் தான் 'பெர்ம்' திட்டத்தில் இருந்து 8 முக்கிய ஐடி நிறுவனங்களை சஸ்பெண்ட் செய்து டொனால்ட் டிரம்ப் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அதன்படி மைக்ரோசாப்ட், அடோப், காக்னிசண்ட், இன்போசிஸ், டாடா, விப்ரோ, கேப்மெஜினி, எச்சிஎல் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் PERM திட்டத்தில் இனி கிரீன்கார்டுக்கு விண்ணப்பம் செய்ய முடியாது.

அமெரிக்காவில் கிரீன்கார்டு என்பது வெளிநாடுகளை சேர்ந்த ஒருவர் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான ஆவணமாக உள்ளது. ஆனால் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் அமெரிக்கர்களை பணியில் இருந்து நீக்கவிட்டு வெளிநாட்டினரை பணியமர்த்தி 'பெர்ம்' திட்டத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த நிறுவனங்களில் பணியாற்றி அமெரிக்காவில் கிரீன்கார்டு பெற்று செட்டில் ஆக வேண்டும் என்ற இந்தியர்களின் கனவு வெறும் கனவாகவே ஆகும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தான் அமெரிக்காவில் உள்ள இந்திய ஐடி ஊழியர்கள் இந்தியா வர வேண்டும் என்று ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு இன்று தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''அமெரிக்காவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்தியர்கள் அளப்பரிய பங்கு செய்துள்ளனர். ஆனாலும் அமெரிக்காவின் பெரும் பகுதியானவர்கள் நம்மை விரும்புவது இல்லை.

அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் கடின உழைப்பால் கட்டமைத்த வாழ்க்கையை பிடுங்கி எறியும் வேதனையான நிலையை எதிர்கொள்கினறனர். இதனை புதிய எதிர்காலம் பிறப்பதற்கான வலியாக இருககட்டும். திரும்பி வாருங்கள். இந்தியாவை கட்டியெழுப்புவோம்'' என்று கூறியுள்ளார். இந்த பதிவில் ஸ்ரீதர் வேம்பு கைக்கூப்பும் இமோஜியை பதிவிட்டு அமெரிக்காவில் உள்ள இந்தியர்களை இந்தியா திரும்ப வர அழைப்பு விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+