காதலர் தினத்தில் இப்படி ஒரு ‘விவாகரத்து’ ஆபரா.. என்னம்மா யோசிக்கிறாய்ங்க!

காதலர் தினத்தில் இலவச விவாகரத்து பெற்றுத் தருவதாக அமெரிக்க சட்ட ஆலோசனை மையம் அறிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு இலவச விவாகரத்து பெற்றுத் தரப்படும் என வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது அமெரிக்க சட்ட ஆலோசனை மையம் ஒன்று.

US Law Firm Offers Free Divorce For Valentine’s Day

ஆண்டுமுழுவதும் ஒவ்வொரு மதத்தினரும் வெவ்வேறு பண்டிகைகளைக் கோலாகலமாகக் கொண்டாடுவதைப் போல், காதலர்களுக்கான பண்டிகை காதலர் தினம் தான். சமீபகாலமாக காதலர்கள் மட்டுமல்ல, அன்பைக் கொண்டாடுபவர்கள் எல்லோருமே காதலர் தினத்தைக் கொண்டாடும் வழக்கம் அதிகரித்து வருகிறது.

பிப்ரவரி 14ம் தேதி தான் காதலர் தினம் என்றாலும், அதற்கு ஒரு வாரம் முன்னதாகவே கொண்டாட்டத்தைத் துவக்கி விடுகின்றனர். காதலர் தினத்தில் ஒருவருக்கொருவர் விதவிதமான பரிசுகளைத் தர விரும்புவதால், கடைகளும் புதுப்புது ஆபர்களை அள்ளி தந்து வருகின்றன.

US Law Firm Offers Free Divorce For Valentine’s Day

இது ஒருபுறம் இருக்க, மனங்களை இணைக்கும் திருநாளாக காதலர் தினத்தை ஒருபுறம் கொண்டாடி வரும் நிலையில், ஏற்கனவே மணமாகி மனம் ஒப்பாமல் பிரிய நினைக்கும் தம்பதிகளுக்கு இலவச விவாகரத்து பெற்றுத் தருவதாக வித்தியாசமான ஆபர் ஒன்றை அறிவித்துள்ளது அமெரிக்காவில் இயங்கி வரும் ஒரு சட்ட ஆலோசனை மையம்.

அமெரிக்காவின் கிராஸ்வில்லே, டென்னசியில் உள்ளது இந்த சட்ட ஆலோசனை மையம். காதலர் தினத்தை முன்னிட்டு இந்த இலவச விவாகரத்து ஆபரை வழங்கி இருக்கிறது. விவகாரத்துப் பெற விரும்பும் தம்பதிகள் இமெயிலில் தங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அனுப்பி வைக்க வேண்டும் எனவும், அந்த விவரங்களை ஆராய்ந்த பின்னர் நீதிமன்றத்துக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தைத் தானே செலுத்தி, இலவசமாக விவகாரத்து வாங்கித் தருமாம்.

காதலர் தினத்தில் புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டுமென காதலர்கள் ஆசையாய் இருக்கும் வேளையில் இப்படி ஒரு ஆபரை வெளியிட்டிருக்கிறதே என நெட்டிசன்கள் ஒருபுறம் இதனை விமர்சித்து வருகின்றனர். மற்றொரு புறம், முழு மனதுடன் பிரிய நினைக்கும் தம்பதிகள் இனி புதிய வாழ்க்கையைத் தொடங்க இது உதவியாய் இருக்கும் என ஒரு தரப்பு பாராட்டி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+