Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு LIVE: தெற்கு அமெரிக்கா எல்லையில் எமர்ஜென்சி.. டிரம்ப்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டிரம்ப் இன்று அமெரிக்காவின் 47ஆவது அதிபராக பதவியேற்றார். அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது. பலம் மிகுந்த, சுதந்திரமான, நம்பிக்கையான தேசத்தை உருவாக்குவதே நோக்கம்,.

எனது ஆட்சி காலத்தில் ஒவ்வொரு நாளிலும் அமெரிக்காவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அமெரிக்கா இதுவரை இல்லாத அளவுக்கு வலிமையான நாடாக சீக்கிரம் மாறும். நான் கொலை தாக்குதலில் இருந்து தப்பித்து வந்திருக்கிறேன். நான் பிழைத்ததற்கு காரணம் உள்ளது. அமெரிக்காவை மீண்டும் மேலே கொண்டு வர கடவுள் எனக்கு தந்த வாய்ப்பு அது.

donald trump inauguration  donald trump

இதற்கு முன் எப்போதும் கிடைக்காத வாய்ப்பு அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கிறது. அமெரிக்காவில் இந்த நொடி முதல் சுதந்திரம் பிறந்திருக்கிறது. அமெரிக்காவில் சட்ட விரோத குடியேற்றம் உடனடியாக தடுத்து நிறுத்தப்படும், என்று டிரம்ப் தனது உரையில் குறிப்பிட்டார். இதே விழாவில் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸும் பதவி ஏற்றனர். முக்கிய உலக வல்லரசுகளுக்கும் இந்தியா உட்பட அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளுக்கும் அழைப்புகள் சென்றன. இந்திய அரசுக்கு முறையாக அழைப்பு சென்றுள்ளது. மாறாக இந்திய பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட அழைப்பு போகவில்லை என்று கூறப்படுகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டார்.

Jan 20, 2025, 11:11 pm IST

மெக்சிகோ இனி கல்ஃப் ஆஃப் அமெரிக்கா என்று அழைக்கப்படும் - டொனால்ட் டிரம்ப்
Jan 20, 2025, 11:11 pm IST

பனாமாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வருவோம் - டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
Jan 20, 2025, 11:00 pm IST

இனி மின்சார வாகனங்கள் என்பது கட்டாயமல்ல - டிரம்ப்
Jan 20, 2025, 11:00 pm IST

உற்பத்தி மையமாக மீண்டும் அமெரிக்கா உருவெடுக்கும் - டிரம்ப்
Jan 20, 2025, 11:00 pm IST

இனி அமெரிக்காவில் ஆண், பெண் என்கிற இரண்டு பாலினங்கள்தான் - டிரம்ப்
Jan 20, 2025, 10:50 pm IST

பைடன் அரசாங்கத்தை விமர்சித்த டொனால்ட் டிரம்ப்
Jan 20, 2025, 10:50 pm IST

எல்லையை பாதுகாக்க பைடன் அரசு தவறிவிட்டதாக குற்றச்சாட்டு
Jan 20, 2025, 10:48 pm IST

அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையில் தென்பட்ட மாற்றம்
Jan 20, 2025, 10:48 pm IST

எப்போதும் உரையில் தெரியும் ஆவேசம் இல்லை: அமைதியாக உரையாற்றிய டிரம்ப்
Jan 20, 2025, 10:31 pm IST

டிரம்ப், ஜேடி வான்ஸ், ஜோ பைடன், கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் பதவியேற்பு விழா நடைபெறும் அமெரிக்க கேபிடல் ரோட்டுண்டா அரங்கிற்கு வந்துவிட்டனர். சில நிமிடங்களில் டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
Jan 20, 2025, 10:27 pm IST

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு வாழ்த்து
Jan 20, 2025, 10:27 pm IST

கேபிடல் அரங்கில் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு வாழ்த்து தெரிவித்தார்
Jan 20, 2025, 10:09 pm IST

அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் & துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி.வான்ஸ் ஆகியோர் விரைவில் பதவியேற்க உள்ளனர
Jan 20, 2025, 10:02 pm IST

தொழிலதிபர்கள் எலான் மஸ்க், சுந்தர் பிச்சை, மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளிட்டோரும் பதவியேற்பு விழா நடைபெறும் கேபிடல் ரோட்டுண்டா அரங்கிற்கு வந்தடைந்தனர்.
Jan 20, 2025, 9:47 pm IST

செயின்ட் ஜான்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற தொடக்க நாள் பிரார்த்தனை நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
Jan 20, 2025, 9:46 pm IST

அதிபர் டிரம்ப் பதவி ஏற்பு விழா: வாஷிங்க்டன் கேபிடல் அரங்கில் நடக்கும் விழாவில் உலக தலைவர்கள் பங்கேற்பு
Jan 20, 2025, 9:35 pm IST

சிஐஏ இயக்குனர் பதவிக்கு குஜராத் பின்புலத்தை கொண்ட காஷ்யப் காஸ் பட்டேல் நியமிக்கப்பட உள்ளார்
Jan 20, 2025, 9:35 pm IST

இவர் டிரம்பிற்கு மிக நெருக்கம், கடந்த டிரம்ப் ஆட்சியில் டிரம்பிற்கு உதவியாக இருந்தவர் காஷ்யப் பட்டேல்
Jan 20, 2025, 9:28 pm IST

அமெரிக்க அதிபராக பதவியேற்கும் டிரம்ப் பதவியேற்பு விழா நடைபெறும் கேபிடல் ஹில்லுக்கு வருகை!
Jan 20, 2025, 9:27 pm IST

அமெரிக்காவின் எல்லைகள், கடல், வான்வெளி பாதுகாப்பு பிரிவிற்கு தலைவராக தாமஸ் டி. ஹோமன் நியமனம்
Jan 20, 2025, 9:27 pm IST

அமெரிக்காவில் அத்துமீறி, அனுமதியின்றி குடியேறியவர்களை வெளியேற்றும் பணிகளை இவர் செய்வார்
Jan 20, 2025, 9:27 pm IST

அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு மிகவும் நெருக்கமானவர் இவர்
Jan 20, 2025, 9:19 pm IST

அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஜில் பிடன் கடைசியாக வெள்ளை மாளிகை முன் செல்பி எடுத்துக்கொண்டனர்
Jan 20, 2025, 9:14 pm IST

கடந்த 2001ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்கும் டிரம்பின் ஆண்டு சம்பளம் 4 லட்சம் டாலராக இருக்கும். இது இந்திய மதிப்பில் 3.46 கோடி ரூபாயாகும். இது தவிர பல்வேறு அலவன்ஸ்களும் அவருக்கு வழங்கப்படும்.
Jan 20, 2025, 9:11 pm IST

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கும் டிரம்புக்கு ரஷ்ய அதிபர் வாழ்த்து
Jan 20, 2025, 9:11 pm IST

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், டிரம்புக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்
Jan 20, 2025, 9:10 pm IST

அமெரிக்காவுடனான அமைதியான உறவுக்கு ரஷ்யா தயாராக இருக்கிறது - புதின்
Jan 20, 2025, 9:01 pm IST

அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலே, ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, எல் சால்வடார் அதிபர் நயிப் புகேலே ஆகியோரும் டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்கள்.
Jan 20, 2025, 8:56 pm IST

டிரம்ப் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றுமாறு மைக் வால்ட்ஸை அழைத்துள்ளார்
Jan 20, 2025, 8:56 pm IST

இவர் முன்னாள் ராணுவ வீரர், கடுமையான சீன எதிர்ப்பாளர்
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+