ஏலியன் எனிமி சட்டம் அமல்.. தெற்கு அமெரிக்கா எல்லையில் எமர்ஜென்சி அமல்.. முதல் பாலே டிரம்ப் சிக்ஸர்!
நியூயார்க்: தெற்கு அமெரிக்கா எல்லையில் எமர்ஜென்சி தொடங்குவதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். எல்லா விதமான முறைகேடான எல்லை பகுதிகளும் மூடப்படும், அமெரிக்காவில் அத்துமீறி ஆவணங்கள் இன்றி உள்ளவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
தெற்கு அமெரிக்க எல்லை என்பது மெக்ஸிகோ -யுனைடெட் ஸ்டேட்ஸ் எல்லை ஆகும். மெக்ஸிகோவையும் அமெரிக்காவையும் பிரிக்கும் சர்வதேச எல்லைதான் அமெரிக்காவின் தெற்கு பார்டர் ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 350 மில்லியன் மக்கள் இந்த பகுதியை ஆவணங்கள் இன்றி கடந்து அமெரிக்கா உள்ளே நுழைகின்றனர். இங்கே ஏற்கனவே பெரிய பெரிய கம்பி வேலிகள், மின்சார வேலிகள் உள்ளன. அதை மீறி மெக்சிகோவில் இருந்தும்.. ஏன் குஜராத்திகள் கூட மெக்சிகோ வழியாக அமெரிக்கா உள்ளே நுழைகிறார்கள்.
இவர்களை தடுக்கும் விதமாக தெற்கு எல்லை பகுதியில் டிரம்ப் எமர்ஜென்சி கொண்டு வர முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே கடந்த ஆட்சியிலேயே அவர் இந்த பகுதியில் எமர்ஜென்சி கொண்டு வந்தார். அதை நாடாளுமன்றம் எதிர்த்து வாக்களித்த நிலையில் அதை வீட்டோ அதிகாரம் மூலம் நீக்கி எமர்ஜென்சியை தெற்கு எல்லை பகுதியில் அமல்படுத்தினார்.
இந்த முறை அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்.. இன்று பதவி ஏற்றவுடன் இந்த எமர்ஜென்சியை மீண்டும் கொண்டு வந்தார்.
சட்டவிரோத அகதிகள்:
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ஜே. டிரம்ப், தாமஸ் டி. ஹோமனை நாட்டின் எல்லைகள் கடல் மற்றும் வான்வெளி எல்லை பாதுகாப்புக்கு பொறுப்பான border czar துறைக்கு தலைவராக நியமிக்க உள்ளார். அதாவது அமெரிக்காவில் அத்துமீறி.. அனுமதியின்றி குடியேறி உள்ளவர்களை வெளியேற்றுவதற்க்கும்.. புதிதாக மக்கள் ஊடுருவதை தடுக்கவும் தாமஸ் டி. ஹோமனை டிரம்ப் உள்ளே கொண்டு உள்ளார்.
டிரம்ப்பின் முந்தைய நிர்வாகத்தில் மூத்த குடியேற்ற அதிகாரியான தாமஸ் டி. ஹோமன் பதவி வகித்து வந்தார். அப்போது இந்த பணியை சிறப்பாக செய்தார். அதோடு அகதிகள் குடியேற்றத்தை வெகுவாக கட்டுப்படுத்தினர். இவர் டிரம்பிற்கு மிக நெருக்கம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. இந்த தேர்தலில் அகதிகள் விவகாரம் உச்சத்தில் இருந்தது. அமெரிக்காவில் வெளிநாட்டினர் முறைகேடாக குடியேறுவதை டிரம்ப் கடுமையாக எதிர்த்தார்.
இதை பிடன் - கமலா அரசு தடுக்க தவறிவிட்டதாக புகார்களை வைத்தார். அதிலும் இந்த விவகாரத்திற்கான border czar துறையை கமலா நேரடியாக கவனித்து வந்தார். அவர் எல்லையை பாதுகாக்க தவறிவிட்டார் என்று புகார்களை டிரம்ப் வைத்தார். இப்படிபட்ட நிலையில்தான் தாமஸ் டி. ஹோமனை நாட்டின் எல்லைகள் கடல் மற்றும் வான்வெளி எல்லை பாதுகாப்புக்கு பொறுப்பான border czar துறைக்கு தலைவராக நியமிக்க உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
டிரம்பின் தேர்தல் வெற்றிக்கு இந்த விவகாரம் முக்கியமான காரணமாக இருந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான்.. டிரம்ப் வென்றதும் விரைவில் அங்கே முறைகேடாக குடியேறி உள்ளவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றபடி எமர்ஜென்சி சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
-
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!












Click it and Unblock the Notifications