தங்கம் விலையில்.. சுனாமியே ஏற்பட போகிறது.. வெனிசுலாவை கைப்பற்றிய டிரம்ப்பால்.. நாளை என்ன நடக்கும்?
சென்னை: வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் காரணமாக உலக அளவில் தங்கம் விலை உயருமா? வெள்ளி விலை உயருமா என்ற எதிர்பார்ப்பும் கேள்விகளும் எழுந்துள்ளது.
அமெரிக்காவின் வெனிசுலா மீதான வான்வழித் தாக்குதல்கள், அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் சிறைபிடிப்பு ஆகியவற்றால் எழுந்த புவிசார் அரசியல் பதட்டங்கள், இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளியின் விலையைப் பாதிக்கலாம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜனவரி 3 சனிக்கிழமையன்று, வெனிசுலாவை கைப்பற்றியதாக அறிவித்தார். அங்கே பாதுகாப்பான, முறையான மற்றும் நியாயமான ஆட்சி மாற்றம் உறுதி செய்யப்படும் வரை அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என்று கூறியிருந்தார்.

இந்த நடவடிக்கைக்கு வெனிசுலாவின் முக்கிய நட்பு நாடுகளான ரஷ்யா, கியூபா, ஈரான் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது இறையாண்மை மீறல் என கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளன. இத்தகைய புவிசார் அரசியல் பதட்டங்கள் மீண்டும் தங்கத்தின் விலையை உயர்த்தும் சூழல் ஏற்பட்டு உள்ளது. வெனிசுலாவை கைப்பற்றியதன் மூலம் அமெரிக்காவின் டாலர் மதிப்பு உயரும்.. இதனால் அமெரிக்கா பலம் அடையும்.. இதன் காரணமாக தங்க மதிப்பு சரியும் என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது.
தங்கம் மதிப்பு என்ன ஆகும்?
ஆனால் இப்போது.. இந்த நொடி வரை வெனிசுலா - அமெரிக்கா போர் முடியவில்லை. அதேபோல் வெனிசுலா மீதான தாக்குதலுக்கு ரஷ்யா, ஈரான், சீனா போன்ற நாடுகள் பதிலடி கூட கொடுக்கலாம். எனவே அதுவரை தங்கம் வெள்ளியே பாதுகாப்பானது என்று பலரும் கருதும் வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்கா-வெனிசுலா மோதலானது இந்தியாவில் தங்கத்தின் போக்கை எவ்வாறு வடிவமைக்கும் என்பதை இங்கு ஆராய்வோம்.
ஜனவரி 3 சனிக்கிழமை அன்று, இந்தியாவில் 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ₹38 குறைந்து ₹13,582 ஆகவும், 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ₹35 சரிந்து ₹12,450 ஆகவும் இருந்தது. இதேபோல், 18 காரட் தங்கம் ₹28 குறைந்து ஒரு கிராமுக்கு ₹10,187 ஆக விற்பனையானது.
உடனடி தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸுக்கு $4,330.5 ஆக 0.36% அதிகரிப்புடன் பதிவானது. ஜனவரி 2 வெள்ளிக்கிழமை அன்று சர்வதேச தங்கம் விலை ஒரு அவுன்ஸுக்கு $4,360 ஆக இருந்தது.
தங்கம் விலை உயருமா?
உலக பதற்றம் பதட்டங்கள் காரணமாக பாதுகாப்பான முதலீடான தங்கம் மற்றும் வெள்ளிக்கு வரும் நாட்களில் தேவை அதிகரிக்கக்கூடும். இதனால், ஜனவரி 5 திங்கட்கிழமையன்று இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் அடையும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அரசியல் வல்லுனர்கள் வெளியிட்ட தகவலின்படி கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் கொஞ்சம் சரிவு காணப்பட்டாலும், பணவீக்கம், நாணய பலவீனம் மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை போன்ற அடிப்படை காரணிகள் காரணமாக மீண்டும் தங்கம் விலை உயரும் .வெனிசுலா போர் காரணமாக தங்கம் விலை மேலும் சரியும் வாய்ப்புகள் உள்ளன.
வெனிசுலா மீதான அமெரிக்கத் தாக்குதலால் குறுகிய காலத்தில் தங்கம், அடிப்படை உலோகங்கள், கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி பொருட்கள் ஆகியவற்றின் விலையில் வலுவான முன்னேற்றம் ஏற்படும்.
அமெரிக்கத் தாக்குதல் இப்பகுதியில் புவிசார் அரசியல் பதட்டங்களைத் தூண்டி, நிச்சயமற்ற தன்மையை அதிகரிக்கும். இதனால், தங்கம், வெள்ளி, செம்பு, கச்சா எண்ணெய், பெட்ரோல் போன்றவற்றுக்கு ஏற்றமான தொடக்கத்தை கொடுக்கும் என்று உலக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications