துரோகம்.. இந்தியாவை கைவிட்ட அமெரிக்கா.. முக்கியமான நேரத்தில் கரம் தரும் ரஷ்யா.. என்ன நடந்தது?
சென்னை: சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து துரோகங்களை செய்து வருகிறது. இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து கடுமையான கருத்துக்களை அமெரிக்கா தெரிவித்து வருகிறது. ஆனால் இதே கட்டத்தில் ரஷ்யா இந்தியாவிற்கு ஆதரவாக களமிறங்கி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் அரசியலில், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தொடர்ந்து அத்துமீறி வருகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக்கிற்கு எச்சரிக்கை விடுத்தார். இந்தியாவில் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டாம் என்று கூறி உள்ளார்.
எச்சரிக்கை மேல் எச்சரிக்கை விடுக்கும் டிரம்ப்
இது தொடர்பாக டிரம்ப் விடுத்த எச்சரிக்கையில், நேற்று டிம் கூக் உடன் எனக்கு ஒரு சின்ன பிரச்சனை ஏற்பட்டது. நான் அவரிடம் சொன்னேன், நீங்கள் என் ஃப்ரெண்ட், நான் உங்களை ரொம்ப நன்றாக நடத்துகிறேன். ஆனால் நீங்கள் பல பில்லியனை இந்தியாவில் முதலீடு செய்கிறீர்கள். இப்போ இந்தியா முழுக்க கட்டிடம் கட்டுவதாக கேள்விப்பட்டேன். நீங்கள் இந்தியாவில் கட்டிடம் கட்டுவதை நான் விரும்பவில்லை.

இந்தியாவை கவனித்துக் கொள்ள விரும்பினால், நீங்க இந்தியாவில் கட்டிடம் கட்டலாம். ஆனால் நீங்கள் அமெரிக்க நிறுவனம். இந்தியாவில் கட்டிடம் கட்ட கூடாது. ஏனென்றால் இந்தியா உலகத்துலயே அதிக வரி விதிக்கிற நாடுகளில் ஒன்று. அதனால் இந்தியாவில் உங்கள் பொருட்களை விற்பது ரொம்ப கஷ்டம். நீங்க பல வருஷமாக சீனாவில் கட்டிய எல்லா பிளாண்ட்களையும் நாங்க பொறுத்துக்கிறோம். ஆனால் இப்போது நீங்க இந்தியாவில் கட்டுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியா தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளட்டும்.. நீங்கள் அமெரிக்காவை பாருங்கள் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
போரை நிறுத்தினேன்
இந்திய அமெரிக்கா போர் பற்றி சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், இந்தியா - பாக். போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வர்த்தகத்தை பெருமளவில் பயன்படுத்தினேன். என் தலையீட்டால்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது. ஒப்பந்தம் செய்வோம், வர்த்தகம் செய்வோம் என அழைத்தேன் உடனே தாக்குதலை நிறுத்திவிட்டார்கள், இரண்டு நாடுகளுமே நிறைய அணு ஆயுதங்களை கொண்டுள்ளன. ஆனால் அணு ஆயுதப் போர் நிறுத்தியது நான் தான் என்பதை உங்களுக்குச் சொல்லிக் கொள்வதில்பெருமைப்படுகிறேன். அவர்கள் நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளும் வலிமை, ஞானம், உறுதி தங்களுக்கு இருக்கிறது என்ற நிலைபாட்டில் இருந்தார்கள். ஆனால் நாங்கள் நிறைய உதவினோம், என்று கூறினார்.
சண்டையை நிறுத்தினால் உங்களுடன் நிறைய வர்த்தகம் செய்யப் போகிறோம் என்று இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் சொன்னேன். போரை நிறுத்தாவிட்டால் நாங்கள் எந்த வர்த்தகத்தையும் செய்யப் போவதில்லை என்று சொன்னேன். உடனடியாக நாங்கள் போரை நிறுத்துவோம் என்று சொன்னார்கள்., என்று கூறி உள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு இந்தியா - பாக். தாக்குதல் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம் பற்றி பேசப்படவில்லை என இந்திய வெளியுறவுத் துறை விளக்கமளித்த பிறகும், வர்த்தகத்தை முன்னிறுத்தி போரை நிறுத்தியதாக சவுதி முதலீட்டாளர் மாநாட்டில் மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் துரோகம்
சர்வதேச அளவில் மேற்கு உலகில் இந்தியாவின் உற்ற நண்பன் என்று கருதப்பட்ட நாடு அமெரிக்கா. இந்தியா பாகிஸ்தான் போர் வந்தால் சீனா பாகிஸ்தான் பக்கம் நிற்கும். அமெரிக்கா இந்தியா பக்கம் நிற்கும் என்றே கருதப்பட்டது. ஆனால் அப்படிப்பட்ட அமெரிக்கா முக்கியமான நேரத்தில் இந்தியாவின் முதுகில் குத்திவிட்டது. இதனால் அமெரிக்காவை உண்மையான நண்பனாக கருதலாமா? டிரம்ப்பை நம்பலாமா என்ற சந்தேகம் டெல்லியில் உள்ள டாப் லெவல் வெளியுறவு அதிகாரிகளுக்கு வந்துள்ளதாம்.
அதோடு வெள்ளை மாளிகையில் இந்தியாவிற்கு சாதகமான பரப்பை அதிகரிக்க வேண்டும் என்ற திட்டமும் டெல்லி அதிகாரிகளுக்கு வந்துள்ளதாம். அதாவது டிரம்ப்பை தேவையான நேரங்களில் இந்தியாவிற்கு சாதகமாக மாற்றும் வகையில் அங்கே அதிகாரிகளை களமிறக்க டெல்லியில் உள்ள டாப் லெவல் வெளியுறவு அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளார்களாம்.
ரஷ்யா உதவி
இதே காலகத்தில் அப்படியே இன்னொரு பக்கம் பார்த்தால் ரஷ்யா இந்தியாவிற்கு ஆதரவாக களமிறங்கி உள்ளது. உதாரணமாக பிரம்மோஸ் ஏவுகணையின் மேம்பட்ட புதிய மாடலை கூட்டாக தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் ரஷ்யாவும் தொடங்கியுள்ளன. ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த பாகிஸ்தானுடனான மோதலின் போது பிரம்மோஸ் ஏவுகணை திறம்பட பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
அதிக திறன் கொண்ட புதிய மாடல் பிரம்மோஸ் ஏவுகணைக்கு ரஷ்யாவிற்கு இந்தியா முழு தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. புது தில்லிக்கும் மாஸ்கோவிற்கும் இடையே ஆரம்ப பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடந்துள்ளன என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
பிரம்மோஸ் ஏவுகணையின் வரம்பை 800 கி.மீ ஆக விரிவுபடுத்துவதில் இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கான ஆராய்ச்சிகளும் நடந்து வருகிறது. ஏற்கனவே முதல்கட்ட சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதை எடையை குறைப்பது, தூரத்தை அதிகரிப்பது, விமானத்தில் இருந்தது ஏவும் வகையில் சிறிய வகைகளை உருவாக்குவது என்று பிரம்மோஸ் ஏவுகணையின் மேம்பட்ட புதிய மாடலை கூட்டாக தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் ரஷ்யாவும் தொடங்கியுள்ளன.
இதன் மூலம் விரைவில் பிரம்மோஸ் லைட் ஏவுகணைகள் கொண்டு வரப்பட உள்ளன. இவை எடை குறைவான ஏவுகணைகள். விமானத்தில் வைத்து தாக்கும் வகையிலான ஏவுகணைகள் ஆகும். MiG-29, Mirage 2000 போன்ற விமானங்களில் வைத்து ஏவக்கூடிய வகையில் விரைவில் பிரம்மோஸ் லைட் ஏவுகணைகள் கொண்டு வரப்பட உள்ளன என்று தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications