ஓலா ஆப் பயன்படுத்துறீங்களா? சீக்கிரம் கார் கிடைக்க பணம் கேட்ட நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓலாவில் கேப் புக் செய்யும்போது, சீக்கிரம் கார் கிடைக்க வேண்டுமானால், கூடுதலாக பணம் கொடுக்க வேண்டுமா? இப்படியொரு நடைமுறைக்குத்தான் இப்போது மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதற்காக ஓலா நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்..!!

பொதுவாக ஒரு சேவையை பயன்படுத்திய பிறகு, அந்த சேவை நன்றாக இருந்தால் கஸ்டமர்கள் விருப்பப்பட்டு டிப்ஸ் தருவார்கள்.. ஆனால், ஓலா ஆப்பில் மட்டும், பயணத்தை முன்பதிவு செய்துவிட்டு டிரைவர் வருவதற்காக காத்திருக்கும்போதே கூடுதல் பணம் செலுத்தும் வசதி காட்டப்பட்டுள்ளது. இதுதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

Ola Cab Booking

ஓலா கேப் புக் செய்யும்போதே டிப் தரணுமா

ஓலா செயலியில் கார் புக் செய்த பிறகு, டிரைவர் அந்த பயணத்தை ஏற்றுக்கொள்ளும் வரை வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தொகை செலுத்துவதற்கான அறிவிப்பு காட்டப்பட்டுள்ளது. அதில், டிப் கொடுத்தால் விரைவாக கார் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்ற பொருளில் தகவல் இடம்பெற்றுள்ளது.

முதலில் ரூ.10 முதல் ரூ.40 வரை குறிப்பிட்ட தொகைகளை தேர்வு செய்யும் ஆப்ஷனும் உள்ளது.. பிறகு இந்த தொகையை ரூ.499 வரை செலுத்தும் வகையில் வசதியும் உள்ளதாம்.

இதனால், ஏற்கனவே காட்டப்பட்ட கட்டணத்தை மட்டும் செலுத்தும் பயணிகளுக்கு கார் கிடைக்க தாமதமாகுமோ என்ற எண்ணம் ஏற்பட வாய்ப்புள்ளது. விரைவாக பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக கூடுதல் பணம் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பது போன்ற மனநிலையையும் இந்த அறிவிப்பு உருவாக்குகிறது.

ஓலாவுக்கு ரூ.10 லட்சம் CCPA அபராதம்

இந்த நடைமுறை தொடர்பாக கடந்த 2025-ம் ஆண்டு மே மாதம் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்துக்கு புகார் சென்றுள்ளது. இதையடுத்து, ஓலாவின் செயல்பாடு குறித்து விசாரணையும் நடத்தப்பட்டது.

இதற்கு ஓலா நிறுவனம் விளக்கம் ஒன்றை தந்துள்ளது. அதில், "கூடுதல் தொகை செலுத்துவது முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களின் விருப்பம், அந்தப் பணம் முழுவதுமாக டிரைவர்களுக்குச் சென்றுவிடும்.. கூடுதல் தொகை செலுத்துவதால் மட்டுமே பயணம் விரைவாக உறுதி செய்யப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை" என்று தெரிவித்துள்ளது.

இது ஒரு விளம்பரமா?

ஆனால், இந்த விளக்கத்தை ஏற்காத CCPA அதிரடியாக தன்னுடைய உத்தரவை பிறப்பித்துள்ளது.. அந்த உத்தரவில், "டிப் கொடுப்பது என்பது சேவை முடிந்த பிறகு வழங்கப்படும் பாராட்டுத் தொகை மட்டுமே. அதை விட்டுவிட்டு, பயணத்தை டிரைவர் ஏற்றுக்கொள்வதற்கு முன்னாடியே, அந்த டிப்ஸை தருமாறு கேட்பது சரியான நடைமுறை கிடையாது.

கூடுதல் பணம் கொடுத்தால்தான் விரைவாக கார் கிடைக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது தவறான விளம்பரமாகிவிடும்.. நியாயமற்ற வர்த்தக நடைமுறையாகிவிடும்.. இது நுகர்வோரை மனரீதியாக அழுத்தும் Dark Pattern வகையைச் சேர்ந்தது.. எனவே, ஓலாவை இயக்கும் ANI Technologies நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது" என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய ஆணையம் உத்தரவு

பயணத்துக்கான முன்கூட்டியே காட்டப்படும் கட்டணத்தை தாண்டி, டிப், Add-on அல்லது வேறு பெயர்களில் கூடுதல் பணம் செலுத்தும்படி கஸ்டமர்களை தூண்டும் அறிவிப்புகளை ஓலா நீக்க வேண்டும்.

இதுபோன்ற அறிவிப்புகள், முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட தொகைகள் மற்றும் கூடுதல் பணம் செலுத்தும்படி மனரீதியாக அழுத்தம் கொடுக்கும் செயலி வடிவமைப்புகளையும் நிறுத்த வேண்டும்,, நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதுடன், உத்தரவைச் செயல்படுத்தியதற்கான அறிக்கையை 15 நாட்களுக்குள் ஓலா சமர்ப்பிக்க வேண்டும்" என்று CCPA ஓலாவுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவானது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெற்று வருகிறது.. காரணம், இனிமேல் ஓலா கேப் புக் செய்யும்போது, ஏற்கனவே காட்டப்பட்ட கட்டணத்துக்கு மேலாக டிப் கொடுத்தால்தான் விரைவாக கார் கிடைக்கும் என்று பயணிகள் நினைக்க வேண்டிய அவசியமில்லை... பயணம் முடிந்த பிறகு டிப் கொடுப்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்வது பயணிகளின் விருப்பம் என்பதைத்தான் இந்த உத்தரவு வலியுறுத்துகிறது...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+