ஒரு நிமிஷம்.. ரயில் டிக்கெட் எடுக்க UTS ஆப்ல ரீசார்ஜ் பண்றீங்களா? இன்று முதல் அமலுக்கு வந்த மாற்றம்!
சென்னை: அனைத்து ரயில் சேவைகளுக்கும் இனி 'ரயில் ஒன்' (RailOne) செயலியை பயணிகள் பயன்படுத்தலாம் என மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லா டிக்கெட், சீசன் டிக்கெட், நடைமேடை அனுமதி சீட்டு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஒரே செயலியில் கிடைக்கும் வகையில் இந்த புதிய செயலி அமல்படுத்தப்பட்டுள்ளது. பி.என்.ஆர். நிலை அறிதல், டிக்கெட் ரத்து, பயண விவரங்கள் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
இன்று முதல் ரயில் ஒன் செயலி பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், மார்ச் 1ம் தேதி முதல் யூ.டி.எஸ். (UTS) செயலி பயணிகள் பயன்பாட்டில் இருந்து படிப்படியாக நீக்கப்பட உள்ளது. ரயில் பயணிகளின் வசதிக்காக கடந்த 2014ஆம் ஆண்டு யூ.டி.எஸ். செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த செயலியின் மூலம் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட், சீசன் டிக்கெட், பிளாட்பாரம் டிக்கெட் உள்ளிட்டவை பெறப்பட்டு வந்தன. இந்நிலையில், யூ.டி.எஸ். செயலியின் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து 'ரயில் ஒன்' என்ற புதிய செயலியை இந்திய ரயில்வே கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.

இந்திய ரயில்வே
தற்போது அந்த செயலியை முழுமையாக நடைமுறைக்கு கொண்டு வர ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, வருகிற 1ம் தேதி முதல் யூ.டி.எஸ். செயலி செயலிழக்கச் செய்யப்படும். முதற்கட்டமாக புதிய சீசன் டிக்கெட் பெறுவது, சீசன் டிக்கெட் புதுப்பித்தல், புதிய பயனர் பதிவு ஆகிய சேவைகள் நிறுத்தப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து பிளாட்பாரம் டிக்கெட் பெறுவது, பதிவு செய்த பயணிகளின் ஆர்-வாலட் கணக்கை ரீசார்ஜ் செய்வது போன்ற வசதிகளும் படிப்படியாக நிறுத்தப்பட உள்ளன. இந்த மாற்றங்கள் முழுமையடையும் வரை யூ.டி.எஸ். செயலி பிளே ஸ்டோரில் இருந்தாலும், அதன் சேவைகள் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர் வாலட்
ஆர்-வாலட் வசதி தினசரி பயணம் செய்யும் மின்சார ரயில், பாசஞ்சர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுக்கு மிகவும் பயன்படும் ஒன்றாக இருந்து வந்தது. இதில் பயணிகள் முன்கூட்டியே ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து வைத்து, பிரிபெய்ட் முறையில் டிக்கெட் பதிவு செய்து வந்தனர். யூ.டி.எஸ். செயலியில் உள்ள ஆர்-வாலட் தொகை, ரயில் ஒன் செயலிக்கு மாறும் போது அப்படியே மாற்றம் செய்யப்படும் என்றும், அந்த தொகையை புதிய செயலியில் பயணிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ரயில்வே நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
ரயில் ஒன்
இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ள 'ரயில் ஒன்' செயலியின் மூலம் முன்பதிவு டிக்கெட், தட்கல் டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட், நடைமேடை அனுமதி சீட்டு, சீசன் டிக்கெட் உள்ளிட்ட அனைத்தையும் ஒரே இடத்தில் பதிவு செய்து கொள்ள முடியும். மேலும் எந்த ரயில் எந்த நேரத்தில் வருகிறது, எந்த நிலையங்களில் நிற்கிறது, இரண்டு நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் ரயில்கள் எவை என்பதையும் இந்த செயலி மூலம் அறிந்து கொள்ளலாம்.
ரயில்வே மாற்றம்
இதனுடன், ரயிலில் அல்லது ரயில் நிலையத்தில் இருந்தபடியே காலை, மதிய மற்றும் இரவு உணவை ஆர்டர் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆர்-வாலட் மூலம் பணம் சேமித்து மின்னணு பரிமாற்றம் செய்யலாம். டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் பணத்தை திரும்ப பெறுவதும் மிகவும் எளிதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 'ரயில் மதாத்' என்ற பிரிவின் மூலம் பயணிகள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை நேரடியாக பதிவு செய்ய முடியும்.
ரயில் டிக்கெட்
இந்த செயலியில் பயணிகள் தங்களது பெயர், புகைப்படம் மற்றும் ஆதார் விவரங்களை இணைத்து சீசன் டிக்கெட் பெற முடியும். முன்பதிவில்லாத டிக்கெட் பெற, ரயில் நிலையத்தில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்தாலே உடனடியாக டிக்கெட் பதிவு செய்யும் வசதியும் உள்ளது. ஒருமுறை பயணிகள் விவரங்களை சேமித்து வைத்தால், ஒவ்வொரு முறையும் தகவல்களை மீண்டும் நிரப்ப தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே அனைத்து பயணிகளும் யூ.டி.எஸ். செயலியிலிருந்து 'ரயில் ஒன்' செயலிக்கு உடனடியாக மாறி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெற்கு ரயில்வே வலியுறுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications