"ஆலமரமும் அலறலும்"..வாச்சாத்தி வன்கொடுமை கேஸில் 215 பேர் குற்றவாளிகள்..தண்டனையை உறுதிசெய்த ஹைகோர்ட்
சென்னை: வாச்சாத்தி மலை கிராமத்தில் பழங்குடி பெண்கள், மக்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கினை, உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு உடனடியாக 10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, தண்டனையை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ளது வாச்சாத்தி மலை கிராமம்... இந்த கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லி, கடந்த 1992ம் ஆண்டு ஜுன் 20ம் தேதி வனத்துறையினர், காவலர்கள், வருவாய் துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினார்கள்.. அப்போது, வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை ஊழியர்கள், பழங்குடி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விசாரணை: இந்த வழக்கை விசாரித்து வந்த தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டு இருந்த 215 பேரும் குற்றவாளிகள் என்று கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி தீர்ப்பு தந்திருந்தது.. இவர்களில் 126 பேர் வனத்துறை அலுவலர்கள், 84 பேர் காவல்துறையினர், 5 பேர் வருவாய்த்துறை ஊழியர்கள் ஆவர்.
இதில் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 12 பேருக்கு தலா 10 ஆண்டுகளும், 5 பேருக்கு 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு தரப்பட்டுள்ளது..
இவர்களைத் தவிர மற்றவர்களுக்கும் வாச்சாத்தி பழங்குடி மக்களை துன்புறுத்தியது, உடைமைகளை சூறையாடியது உள்ளிட்ட பிரிவுகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த குற்றங்களுக்காக அவர்களுக்கு தலா 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இன்று தீர்ப்பு: இந்த வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர். மீதமுள்ளவர்களுக்குத்தான் ஒரு வருடம் முதல் 10 வருடங்கள் வரை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள், சென்னை ஹைகோர்ட்டில் அப்பீல் செய்துள்ளனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தீர்ப்பு மட்டும் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது..
ஆய்வு: பிறகு கடந்த மார்ச் 4ம் தேதி, சம்பவம் நடந்த வாச்சாத்தி மலை கிராமத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி நேரில் சென்று ஆய்வு செய்த நிலையில், வாச்சாத்தி மேல்முறையீட்டு வழக்கில் இன்றைய தினம் அதாவது, செப்டம்பர் 29ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அந்த கொடூர சம்பவத்தை இன்றும் நினைவுகூர்ந்தபடியே உள்ளனர் வாச்சாத்தி கிராமத்தினர்.. இந்த கிராமத்தின் நடுவில் ஒரு ஆலமரம் உள்ளது.. சம்பவம் நடந்த தினத்தன்று மாலை, அந்த ஆலமரத்தின் அடியில் மக்களின் உடைமைகளை சுக்குநூறாக உடைத்து போட்டு, மொத்த பேரையும் திரள செய்து தாக்கினர்..
இளம்பெண்கள்: 18 இளம்பெண்களை வனத்துறை அலுவலகத்துக்கு இழுத்து சென்று, கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தனர்.. பெண்களின் மார்பகங்களில் சூடு வைத்தனர். ஆண்களை இரவு முழுதும் அடித்து துன்புறுத்தினர்.. இந்த மரத்திற்கு மட்டும் பேசும் திறமையிருந்தால், சாட்சியாக மாறி, உண்மை குற்றவாளிகளை நீதிமன்றத்தில் சொல்லியிருக்கும்.. 30 வருடமானாலும், நீதி நிச்சயம் கிடைக்கும்" என்று நம்பிக்கையுடன் சொல்லி வருகிறார்கள்.
தள்ளுபடி: இந்நிலையில், தருமபுரி வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் 215 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தண்டனைக்கு எதிரான மேல் முறையீட்டு மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன.
மனுக்களை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், அவற்றை தள்ளுபடி செய்ததோடு தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்வதாக கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும், இதில் ரூ.5 லட்சம் அரசாங்கமும், ரூ 5.லட்சம் பாலியல் வன்கொடுமை செய்தவர்களிடமிருந்து வசூலித்தும் தர வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த தீர்ப்புகள் குறித்தும், பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பு வழக்கறிஞர் இளங்கோ அளித்த பேட்டியில், "அப்போதைய தருமபுரி ஆட்சியர், எஸ்.பி., வன அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும், அந்த பகுதியில் தேவைப்படும் மக்கள் நலப் பணிகளை செய்துதர வேண்டும் என்று நீதிபதி இன்றைய தீர்ப்பில் வலியுறுத்தியிருக்கிறார்.
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் நீதிபதி வேல்முருகன் மேல் முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்துள்ளார். தருமபுரி நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ளார். பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்" என்றார். 30 வருடங்களாக ஆண்டுகளாக காத்திருக்கும் மலைக்கிராமம், இந்த தீர்ப்பினை வரவேற்று வருகிறார்கள்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications