ரூ.1000 கோடி.. ஒன்றாக இணைக்கப்பட்ட 15 துறைகள்.. சென்னையின் அடையாளமாகும் வடசென்னை.. சூப்பரு!
சென்னை: வடசென்னையின் வளர்ச்சியை குறி வைத்து தமிழ்நாடு அரசு முக்கியமான திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி 15 முக்கிய துறைகளை இணைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
சென்னையில் தென்சென்னை தொடர்ந்து வளர்ந்து வந்தாலும் இன்னும் வடசென்னை பெரிதாக வளர்ச்சி அடையவில்லை. இந்த நிலையில்தான் வடசென்னையின் வளர்ச்சியை குறி வைத்து தமிழ்நாடு அரசு முக்கியமான "பிக் ப்ராஜெக்ட்" திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.

அதன்படி வடசென்னை வளர்ச்சியை மையப்படுத்தி, அங்கே உள்ள குறைகளை போக்க, 1,000 கோடி ரூபாய் செலவில், 'வடசென்னை வளர்ச்சி திட்டம்' என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வடசென்னையை மொத்தமாக உருமாற்றம் விதமாக இந்த பணிகள் தொடங்க உள்ளன. அங்கே அடிப்படை வசதிகள் தொடங்கி அல்டிமேட் வசதிகள் வரை பலவற்றை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
தென்சென்னை அளவிற்கு அல்லது தென்சென்னையை விட சிறப்பாக சென்னையை வளர்க்கும் முடிவில் இந்த 'வடசென்னை வளர்ச்சி திட்டம்' கொண்டு வரப்பட்டு உள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) சார்பாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழும (சிஎம்டிஏ) அமைச்சர் சேகர் பாபு தலைமையில் இந்த பணிகள் நடக்க உள்ளன. இதன் ஒரு கட்டமாக வுமன் கிர்ஸ்டியன் கல்லூரி மற்றும் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மாணவர்கள் வடசென்னையின் பல்வேறு பகுதியில் உள்ள உள்கட்டமைப்பு இடைவெளிகளைக் கண்டறிய ஒரு கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ளனர்.
இவர்கள் அங்கே உள்ள பிரச்சனைகளை சர்வே எடுக்க உள்ளனர். அதேபோல் அதிகாரிகளும் தனியாக சர்வே எடுக்க உள்ளனர். பொதுமக்கள், சுயஉதவி குழுக்கள், மீனவர்கள், ஓட்டுநர்கள், விளையாட்டு வீரர்கள், வர்த்தகர்கள் போன்றோரைஅவர்கள் சந்தித்து அவர்களின் சமூக, பொருளாதார மற்றும் உளவியல் பிரச்சனைகளை, குறைபாடுகளை ஆய்வு செய்வார்கள். மணலி, திருவொற்றியூர், மாதவரம், தொண்டியார்பேட்டை, கொளத்தூர் ராயபுரம், திரு வி கா நகர் & அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் இவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.
ஆய்வின் முடிவில் என்னென்ன மாதிரியான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற ரிப்போர்ட்டை இவர்கள் கொடுக்க உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ்15 முக்கிய துறைகளை இணைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இளைஞர் நலன் விளையாட்டு
தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு
நீர்வளத்துறை
சென்னை மாநகராட்சி மின்சார வாரியம்
நெடுஞ்சாலைத் துறை
பள்ளிக்கல்வித் துறை
உயர்கல்வித் துறை
நகராட்சி திலாகம், நீர் வழங்கல் துறை சென்னை பெருநகர் நீர் வளங்கள் துறை
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் ,
வீட்டுவசதி மேம்பாட்டு வாரியம் ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட உள்ளன. மொத்தம் 176 சதுர கிலோ மீட்டருக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
சிங்கார சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தை ஆட்சிக்கு வந்ததில் இருந்தே திமுக அரசு தீவிரமாக செயல்படுத்த முயன்று கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு பட்ஜெட்டில் கூட இது தொடர்பான பல முக்கியமான அறிவிப்புகள், திட்டங்கள் வெளியாகின.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிய சுற்றுலா பகுதிகளை உருவாக்குவது, பழைய சுற்றுலா பகுதிகளை மேம்படுத்துவது என்று பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
முக்கியமாக சென்னையில் இருக்கும் கடற்கரைகளை சுத்தப்படுத்தும் பணிகளும் நடந்து கொண்டு இருக்கின்றன. சென்னையில் பல புதிய அலங்கார அமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கியமாக சாலைகளையும், பொது இடங்களையும் சுத்தப்படுத்தும் பணிகளும் சென்னையில் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது.
சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. லண்டனை சேர்ந்த கீ கார்ட்னஸ் அமைப்புடன் சேர்ந்து தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். சென்னை அருகே 300 கோடி செலவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். அதேபோல் துறைமுக நகரங்கள் திட்டத்துக்கு 1,825 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications