அப்பாவை உரிச்சு வச்ச மாதிரி.. அச்சு அசல் வடிவேல் பாலாஜி தான்! கண்ணை கலங்க வைக்கும் மகனின் கெட்டப்
சென்னை: விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு, அது இது எது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நடிகர் வடிவேல் பாலாஜி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இந்த நிலையில் தற்போது அவரது மகனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அச்சு அசலாக தந்தையைப் போலவே அதுவும் அவர் போட்ட வடிவேலு கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
விஜய் டிவி மூலம் ஏராளமானோர் சின்னத்திரையில் இருந்து, திரைத்துறைக்கு வந்திருக்கின்றனர், அப்படி வந்தவர்களில் ஒருவர் வடிவேல் பாலாஜி. விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, ராஜூ வீட்ல பார்ட்டி, ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்.
2008 ஆம் ஆண்டு கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் தான் விஜய் டிவியில் கால் வைத்தார் அதற்குப் பிறகு அது இது எது நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு மூலம் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்றார். அதற்குப் பிறகு விஜய் டிவியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவருக்கு இடம் கொடுக்கப்பட்டது.

வடிவேலு கெட்டப்பில் அவர் எந்த கெட்ட போட்டாலும் அச்சு அசலாக பொருந்திப் போகும். குறிப்பாக வசனமே பேசாமல் வடிவேலு போல் ஆக்சன் மூலமே விருந்தினர்களையும், ரசிகர்களை சிரிக்க வைப்பது வடிவேலு பாலாஜியின் ஸ்பெஷல் திறமை. தொடர்ந்து சினிமாவிலும் அவர் நடித்தார். யாருடா மகேஷ், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.
கடைசியாக 2019 ஆம் ஆண்டு ஸ்டார்ட் மியூசிக் 2 சீசனில் பங்கேற்ற அவர் 2020 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவரது இந்த மரணம் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது உடலுக்கு சின்னத்திரை பிரபலங்கள், நடிகர் சிவகார்த்திகேயன், ரசிகர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தனது திறமையால் உயர்ந்த வடிவேலு பாலாஜிக்கு ஒரு மகன் இருக்கிறார். தற்போது அவரது புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அதுவும் தனது தந்தையின் பேவரிட் கெட்டப் ஆனா வடிவேலு கெட்டப்பிலேயே அவர் இருக்கிறார் வடிவேலு பாலாஜியின் மகனான ஸ்ரீகாந்த்.
வடிவேலுவின் வெற்றி கொடி கட்டு திரைப்படத்தில் நீல நிற ஜிப்பா லுங்கி அணிந்து காமெடி காட்சிகளில் நடித்திருப்பார். அதே கெட்டப்பை போட்டு வடிவேலு பாலாஜி பல நிகழ்ச்சிகளில் காமெடியில் கலக்கி இருக்கிறார். தற்போது அதே கெட்டப்பை ஸ்ரீகாந்த் பாலாஜியும் போட்டுள்ளார். மேலும், தந்தையின் புகைப்படத்துக்கு முன் அவரது கெட்டப்பை போட்டு தங்கை மற்றும் தாயுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்து பலரும் பாராட்டி வருவதோடு வடிவேலு பாலாஜியின் நண்பர்கள், சினிமாத் துறையினர் ஸ்ரீகாந்த் பாலாஜிக்கும் சினிமா துறையிலும், சின்னத்திரையிலும் வாய்ப்பு தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
-
இதுவும் கடந்து போகும்.. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் மறுபக்கம்.. நீயா நானாவில் கண் கலங்கிய அம்மா -
சூப்பர் சிங்கர் அருணா கல்யாணத்தில் சுவாரசியம்! ஒன்று சேர்ந்த விஜய் டிவி பிரபலங்கள்.. அதுவும் யாரெல்லாம்னு பாருங்க -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி போட்ட பிளான்.. செக் வைத்த ரோகிணி! அடித்து விரட்டிய மீனா! சந்தோஷத்தில் முத்து -
கண் கலங்க வைத்த நீயா நானா.. இது பலருக்கும் பாடம்.. கடந்து வந்த வலி, கோபிநாத்தை மிரட்டி விட்ட அம்மா! -
சிறகடிக்க ஆசை: எலக்ஷனில் ஜெயித்த மீனா.. பிறகு நடந்த எதிர்பாராத சம்பவம்! மனம் மாறும் விஜயா.. சிந்தாமணியின் பிளான் -
சிறகடிக்க ஆசை சீரியல் அணிலா ஸ்ரீகுமாருக்கு 3வது கல்யாணம்.. குழந்தைகள் முன்பே நடந்த சம்பவம்! குவியும் வாழ்த்து -
கொலை மிரட்டல் விடுறாங்க.. பயமா இருக்கு.. கமிஷனர் ஆபீஸில் பதறிய வாட்டர் மெலன் திவாகர்! -
ராத்திரி நேரத்து பூஜையில்.. விஜய் டிவி நிகழ்ச்சியில் டிஸ்கோ சாந்தி போட்ட டான்ஸ்! அசந்து போன ரம்பா! -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம்












Click it and Unblock the Notifications