Thirumavalavan: திருமாவளவனுக்கு 24 மணி நேரம் போதாது! சொன்னது யார்னு பாருங்க! "2025" ரீகேப்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு 24 மணி நேரம் போதாது என தவெக துணை பொதுச் செயலாளர் வைகைச் செல்வன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முப்பெரும் விழா, சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் நேற்றைய தினம் நடந்தது. இந்த விழாவில் வைகைச்செல்வன் பேசுகையில், திருமாவளவனுக்கு 24 மணி நேரம் போதாது. அவர் ஒரு கடுமையான உழைப்பாளி.

thirumavalavan

திருமாவளவனை ஆதரிக்கலாம், எதிர்க்கலாம். ஆனால் அவரை கடந்து போக முடியாது என வைகைச்செல்வன் பாராட்டி பேசினார்.

வைகைச்செல்வன் அதிமுகவில் இருந்தார். அங்கு அவருக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை, மேலும் திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சி அமைக்க முயன்றது போன்ற காரணங்களால் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார்.

கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் இருந்த விசிகவை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக, தவெக ஆகியவை முயற்சித்ததாக சொல்லப்படுகிறது.

அதற்கேற்ப கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிமுகவில் இருந்த வைகைச்செல்வன், திருமாவளவனை திருச்சியில் ஒரு ஹோட்டலில் சந்தித்து பேசினார். அப்போது திருமாவுக்கு ஒரு புத்தகத்தை வைகைச்செல்வன் பரிசாக கொடுத்திருந்தார். மேலும் வைகைச்செல்வனின் இலக்கிய பணிகள் குறித்தும் திருமாவளவன் வெகுவாக பாராட்டி பேசியிருந்தாராம்.

இதனால் விசிக, அதிமுக கூட்டணிக்கு வருகிறதோ என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் இதுகுறித்து வைகைச்செல்வனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர், "ஆளுங்கட்சியாக உள்ள திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது என்பதை தான் என்னால் சொல்ல முடியும்" என வைகைச்செல்வன் பரபரப்பை கிளப்பியிருந்தார்.

இதனிடையே திருமாவளவன் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் "திமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றால் விசிக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும். நாங்கள் தனியாக நிற்போம். எங்கள் கொள்கைக்காகத்தான் நாங்கள் நிற்கிறோம்" என்று கூறியிருந்தார்.

இதனால் திமுக கூட்டணிக்கு பாமக செல்கிறதோ என்னவோ, அதனால் விசிக, அதிமுக கூட்டணிக்கு செல்கிறது என பேச்சு அடிப்பட்டது. இதுகுறித்து திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் "வைகைச்செல்வன் நட்பின் அடிப்படையில் என்னை சந்தித்தார். வைகைச்செல்வனுடன் நான் அரசியல் குறித்து பேசவில்லை" என்றார்.

இப்படிப்பட்ட நிலையில் விசிக , திமுக கூட்டணியில் பயணித்து 2 சட்டசபை உறுப்பினர்களை பெற்றது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தவெக ஆதரவு கேட்ட நிலையில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி ஆதரவு கொடுத்தது, தற்போது தவெக அமைச்சரவையிலும் விசிக இடம்பெற்றது. செல்லும் இடங்களில் எல்லாம் திமுக கூட்டணியில் இருந்து விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளியேற காரணம் திமுகதான் என கூறி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது விசிகவும் தவெகவுடன் கூட்டணியில் இருக்கிறது, வைகைச்செல்வனும் தவெகவில் இணைந்துவிட்டார். தற்போது விசிக முப்பெரும் விழாவில் கூட்டணி கட்சி என்ற முறையிலும் நட்பின் அடிப்படையிலும் வைகைச்செல்வன் கலந்து கொண்டிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+