வெத்து போராட்டம் நடத்துகிறார் வைகோ... தமிழிசை விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடி வருகையின் போது கருப்பு கொடி காட்டுவேன் என வைகோ கூறுவது வெத்து போராட்டம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும்.

Vaiko black flag protest Is dummy Says Tamilisai Soundararjan

40 இடங்களிலும் எதிர்க்கட்சிகள் பலவீனமாக உள்ளது. ஸ்டாலின் கிராமசபை கூட்டம் நடத்திவிட்டு அடுத்ததாக யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. கமல் எத்தனை பேரை சந்தித்தாலும் மக்கள் சிந்தித்துதான் வாக்களிப்பார்கள்.

ஏழை விவசாயிகளைப் பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காத ப.சிதம்பரம் விவசாயிகளுக்கு நிதி உதவி செய்வதை கொச்சைப்படுத்துகிறார். அவரை, விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள். மேலும் வரும் 6ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். பிரதமர் மோடியின் வருகை சரித்திர மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தும்.

தேமுதிகவிற்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது. கூட்டணிக்கு வந்தாலும் உரிய மரியாதை கொடுக்கப்படும். கூட்டணி எண்ணிக்கை பெரிதல்ல எண்ணம் தான். பிரதமர் மோடி வருகையின் போது கருப்பு கொடி காட்டுவேன் என வைகோ கூறுவது வெத்து போராட்டம் .

தேமுதிகவிற்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது கூட்டணிக்கு வந்தாலும், உரிய மரியாதை கொடுக்கப்படும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+