அண்ணாமலை ஏதேதோ உளறிக்கிட்டு இருக்காரு.. அதுக்கெல்லாம் பதில் சொல்லணுமா? சட்டென சீறிய வைகோ!
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு, காட்டமாக பதில் அளித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. திமுக தொகுதி பங்கீட்டு குழுவினர், கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சிபிஐஎம், சிபிஐ, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர்.

மதிமுகவை பொறுத்தவரை கடந்தமுறை, அக்கட்சி சார்பில் கணேசமூர்த்தி, ஈரோடு லோக்சபா தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ராஜ்யசபா இடம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், 2 லோக்சபா சீட் + 1 ராஜ்யசபா பெற மதிமுக முயன்று வருவதாகத் தெரிகிறது.
கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி மதிமுகவின் ஆடிட்டர் அர்ஜுனராஜ், செந்திலதிபன், ஆவடி அந்திரிதாஸ், சேஷன் ஆகியோர் திமுக தொகுதி பங்கீட்டு குழுவினருடன் அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, மதிமுகவை, திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
எனினும், மதிமுக, இந்த முறை பம்பரம் சின்னத்தில் நிற்பதில் மதிமுக உறுதியாக இருக்கிறதாம். இதனால், அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில், என்ன நிலவரம் என்பது தெரியவரும். இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவரிடம், லோக்சபா தேர்தலுக்கு திமுகவிடம் எத்தனை தொகுதிகள் கேட்டீர்கள் என்ற கேள்விக்கு, "முதல் ரவுண்ட் சும்மா பார்த்துட்டு வந்து இருக்காங்க. தொகுதி எண்ணிக்கையோ, எந்த இடமோ என்பது பற்றி இன்னும் எதுவும் பேசவில்லை" என்றார்.
நீங்கள் திமுக கூட்டணியில் எத்தனை சீட்கள் கேட்டீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த வைகோ, "அதை எப்படி உங்களிடம் சொல்ல முடியும்" என்றார்.
திமுக கூட்டணி மீதான பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு, "அண்ணாமலை ஏதேதோ உளறிக்கொண்டிருக்கிறார். அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா?" என்றார்.
அதிமுக மீதான அண்ணாமலையின் விமர்சனத்துக்கு பதிலளித்த வைகோ, "இது கண் துடைப்பு இல்லை; அந்த ஆள் அனாவசியமாக பேசக் கூடாததை பேசுகிறார். இதற்கு அவர்கள் பதில் சொல்கிறார்கள்" என்றார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications