சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பழைய நண்பர்களுக்காக பாஜக கூட்டணி கதவு திறந்துகிடக்கிறது... மோடிக்கு வைகோ பதில் என்ன தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    யாருடன் கூட்டணி?-மோடி கூறிய பதில்-வீடியோ

    சென்னை: பாஜக கூட்டணியில் மதிமுக சேர ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

    நாடாளுமன்றத் தேர்தல் வரும் மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதி அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரும் என்ற நிலையில் பெரும்பாலான கட்சிகள் பாஜகவை வீழ்த்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

    கூட்டணி பேரங்களும் ஒருபுறம் நடந்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் தமிழக பாஜகவினருடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

    பழைய நண்பர்கள்

    பழைய நண்பர்கள்

    அப்போது அவர் தமிழகத்தில் யாருடனும் கூட்டணி இல்லை. வாஜ்பாய் கலாசாரத்தை பின்பற்றி நம்முடைய பழைய நண்பர்களை வரவேற்க நாம் எப்போதும் தயாராக இருக்கிறோம்.

    கூட்டணி கட்சிகள்

    கூட்டணி கட்சிகள்

    கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று அவர் பேசிய பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வாஜ்பாய் இருந்த காலத்தில் பாஜக கூட்டணியில் அதிமுக, திமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று வருகின்றன.

    வைகோ பதில்

    வைகோ பதில்

    பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், என்னுடைய 54 ஆண்டுகால பொது வாழ்வில் 24 ஆண்டுகால நாடாளுமன்ற அனுபவத்தில் அடல்பிகாரி வாஜ்பாய் போல சிறந்த மனிதரை பார்த்ததில்லை. அவர் தான் என் நெஞ்சில் இமயமாய் இருக்கும் தலைவர். இவ்வளவு ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திரமோடிக்கு இப்போது தான் வாஜ்பாய் ஞாபகம் வருகிறதா?.

    நிச்சயம்

    நிச்சயம்

    ஈழ பிரச்சினையில் வாஜ்பாய் கடைப்பிடித்த அதே வெளிநாட்டு கொள்கையை நீங்கள் பின்பற்றுவீர்களா? என்று கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மோடியிடம் கேட்டபோது, நிச்சயமாக பின்பற்றுவேன் என்று சொன்னார்.

    டெல்லியில் போராட்டம்

    டெல்லியில் போராட்டம்

    ஆனால் வெற்றி பெற்ற முதல் நாளே அவர் அதில் இருந்து விலகினார். தனது பதவியேற்பு நிகழ்வுக்கு ராஜபக்சேவை அழைத்தார். இதன் மூலம் எங்கள் நம்பிக்கையில் அவர் கல்லை தூக்கி போட்டார். நாங்களும் அவருக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தினோம்.

    சாதனை

    சாதனை

    பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்திற்கு 27-ஆம் தேதி வந்தாலும், எப்போது வந்தாலும் பாஜகவுக்கு தோல்வி தான். எங்களை பொறுத்தவரையில் திமுக கூட்டணியில் மதிமுக உறுதியாக இருக்கிறது. திமுக கூட்டணி தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வென்று சாதனை படைக்கும். திமுகவின் வெற்றிக்காக மதிமுக பாடுபடும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

    English summary
    MDMK General Secretary Vaiko says about election alliance and gives suitable reply to Modi's call for alliance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X