லோக்சபா தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி.. ஈரோடு வேட்பாளர் அறிவிப்பு
ஈரோடு: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக ஈரோடு வேட்பாளர் கணேசமூர்த்தி அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான திமுக கூட்டணியில் மதிமுக.,விற்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் வேட்பாளராக கணேசமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.
தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையின் போது சின்னம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியிருந்தார்.

ஸ்டாலின்
தற்போது சில நாட்களுக்கு முன்னர் பேட்டியளித்த வைகோ, மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடும் என கூறினார். தனியார் தொலைகாட்சி சேனலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் உதயசூரியன் அனைவருக்கும் அறிந்த சின்னம். இதனால் இச்சின்னத்தில் போட்டியிடுங்கள் என மதிமுகவை கேட்டுக் கொண்டுள்ளோம்.

மதிமுகவிடம் கோரிக்கை
தொடர்ந்து இதுகுறித்து வைகோவிடம் வலியுறுத்தி வருகிறோம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து வைகோ கூறுகையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுகவை திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

நிர்வாகிகளுடன் ஆலோசனை
இந்த நிலையில் ஸ்டாலினின் யோசனை குறித்து மூத்த நிர்வாகிகளிடம் நான் கலந்து பேசினேன். அதற்கு அவர்கள் வேறு ஏதோ பரிட்சயம் ஆகாத சின்னத்தில் போட்டியிடுவதற்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் என்ன என நிர்வாகிகள் கேட்டனர் என அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார் வைகோ.

மதிமுக வேட்பாளர்
இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியை போல் மதிமுகவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துவிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மொடக்குறிச்சியில் வேட்பாளர் அறிமுகத்தில் கலந்து கொண்ட ஈரோடு மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி, இந்த லோக்சபா தேர்தலில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என அறிவித்தார்.

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி
புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது. இந்நிலையில் தென்காசியில் தனது கட்சியினருடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர் வெற்றிச் சின்னத்தில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். இதனால் புதிய தமிழகமும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications