திமுக கூட்டணியில் மதிமுக இருக்கிறது.. ஸ்டாலின் விளக்கமே பதில்.. வைகோ
Recommended Video

சென்னை: திமுக கூட்டணியில் மதிமுக இருக்கிறதா என்பது குறித்த சர்ச்சைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த விளக்கமே பதிலாகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் இருக்கின்றனவா என்பதில் திடீரென குழப்பம் ஏற்பட்டது. காரணம் துரைமுருகன். வைகோவும், திருமாளவனும் தோழமையுடன் உள்ளனர். கூட்டணியில் இல்லை என்று அவர் கூறப் போக பரபரப்பாகி விட்டது.

இதையடுத்து நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் முகம் மலர திரும்பிச் சென்றார். இந்த நிலையில் இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், மதிமுக நடத்தும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்திற்கு திமுக ஆதரவளிக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் மதிமுக இருக்கிறதா என்ற சர்ச்சைக்கும் ஸ்டாலினின் இந்த விளக்கமே பதிலாகும். கூட்டணிப் பிரச்சினைக்கும் ஸ்டாலின் பதிலளித்து விட்டார்.

ஊடகங்களில் இன்று வரை பார்த்து கொண்டு வருகிறேன். எப்படியாவது கூட்டணியில் இருந்து என்னை வெளியேற்ற வைக்க வேண்டும் என்பது பல பேருடைய விருப்பமாக இருக்கிறது. கேலிச் சித்திரம் போடுகிறார்கள். ஆனால் அது எப்போதும் நடக்காது.
7 தமிழர் விடுதலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாரபட்சமாக நடந்து விட்டார். 7 தமிழரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அமைச்சரவை தீர்மானத்தை ஏற்று விடுதலைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால் பஸ் எரிப்பு வழக்கில் 3 அதிமுகவினரை விடுதலை செய்துள்ளார். கேட்டால், அவர்களுக்கும் கொல்லப்பட்டவர்களுக்கும் முன்பகை இல்லை என்று விளக்கம் தருகிறார்.
ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசு முழுமையாக தோல்வி அடைந்துள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கைக்கூலியாக தமிழக அரசு செயல்படுகிறது என்பதையே இது காட்டுகிறது என்றார் வைகோ.
துரைமுருகன்:
இந்த சந்திப்பின்போது சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்ட துரைமுருகனும் உடன் இருந்தார். அதிலும் வைகோவின் அருகில் அவர் சிரித்த முகத்துடன் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னாள் அமைச்சர்கள் டிஆர்.பாலு, பொன்முடி உள்ளிட்டோரும் சந்திப்பின்போது இருந்தனர்.
-
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான்












Click it and Unblock the Notifications