விஜய் ஆட்சி என்ன சாதிச்சதுன்னு கேட்குறாங்களா.. பதிலோடு வந்த வைகோ! திமுக மீது கடும் அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த அரசு வந்து என்ன சாதித்தது என கேட்பவர்களுக்கு இதை சொல்கிறேன். ஊழலை ஒழிப்பது சாதாரண காரியம் அல்ல.. ஊழலை ஒழிப்பது இமயமலையை நகர்த்துவதற்கு சமம்.. ஆனால் அதில் முதல்வர் விஜய் உறுதியாக இருக்கிறார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

மேலும், "பொறுக்கல.. ஆட்சி போயிருச்சே.. அதிகாரம் போயிருச்சே.. வர வேண்டிய கமிஷன் வரவில்லையே.. வந்து கஜானாவில் குவிந்துகொண்டே இருக்குமே.. எல்லாமே நின்னு போயிட்டே.. மணற் கொள்ளை நின்னு போயிடுச்சே.. டாஸ்மாக் நின்னு போயிடுச்சே.. கதவை புல்லா அடைத்துவிட்டானே.. எப்படியாவது ஆட்சியை கவிழ்த்துவிட்டு, அதிமுகவை ஆட்சி அதிகாரத்தில் அமர வைக்கனும்னு பேசினார்கள்" என திமுகவை மறைமுகமாக விமர்சித்தார்.

Vaiko praise Vijay TVK government is fighting to eradicate corruption DMK is struggling while out of power

இமயமலையை நகர்த்துவதற்கு சமம்

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது:- "ஒரு தொலைக்காட்சி நிறுவன அதிபரிடம் நான் அழைப்பிதழ் கொடுத்தேன். அப்போது அவர் என்னிடம் சொன்னார்.. மாதம் ஒன்றரை கோடி ரூபாய் கப்பம் கட்டினோம்.. இப்போது 10 பைசா கொடுக்கவில்லை, வேலை நடக்குது. இது மாதிரி நூறு பேர் என்னிடம் சொல்லியிருப்பார்கள்.. நாங்கள் 15 லட்சம் கமிஷன் கட்டினோம் வீடு கட்டுவதற்கு.. 20 லட்சம் கொடுத்தோம்.. 25 லட்சம் கொடுத்தோம்.. ஆனால் இப்போது ஒரு பைசா கூட கொடுக்கவில்லை வீடு கட்டுவதற்கு என சொல்றாங்க..

இந்த அரசு வந்து என்ன சாதித்தது என கேட்பவர்களுக்கு இதை சொல்கிறேன். ஊழலை ஒழிப்பது சாதாரண காரியம் அல்ல.. இது வந்து இமாலய இலக்கு.. ஊழலை ஒழிப்பது இமயமலையை நகர்த்துவதற்கு சமம்.. அதில் உறுதியாக நிற்கிறார் விஜய்.. ஊழலை ஒழித்துவிட்டார். ஆனால் இப்போது கமிஷன் இல்லாமல் ஃபைலை நகர்த்தமாட்டேன் என சிலர் இருக்கிறார்கள். இப்படி கமிஷன் வாங்கி பழகியவர்களை எந்த பொறுப்பும் இல்லாத இடத்திற்கு தூக்கியடிங்கள்..

ரகசிய பேரம் நடத்துகிறீர்கள்

ஐஏஎஸ் படித்துவிட்டு புதிதாக வரும் அதிகாரிகளுக்கு கமிஷன் வாங்கி பழக்கம் இருக்காது. எனவே அவர்களை அந்த இடத்திற்கு நியமியுங்கள்.. லஞ்சம், ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால் இத்தனை சவால்களை சந்தித்து தான் ஆக வேண்டும். ஆனால் அதற்கு முன்பாகவே 6 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என எதிர்க்கட்சிகள் பேசி வருகிறார்கள். நீங்கள் திரை மறைவில் ரகசிய பேரம் நடத்துகிறீர்கள் என்று ஆண்ட கட்சியை குற்றம் சாட்டுகிறேன். இவர்கள் அதற்கு பதிலாக கார்ட்டூன் போடுவது, தவெக பாஜகவோடு நெருக்கம் காட்டுகிறது என வடிகட்டிய பொய்களை நாள்தோறும் முரசொலியில் போட்டு வருகிறார்கள்.

தமிழக வெற்றிக் கழகம் மதசார்பின்மையையும், சமூக நீதியையும் காக்கும் அரணாக இருக்கும் என ஆதவ் அர்ஜுனா கூறினார். முதல்வர் விஜய் சொன்னார்.. இந்த நம்பிக்கை தான் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கும் அமைச்சரவையில் பங்கேற்று உள்ளது. வேறு என்ன ஆதாரம் வேண்டும். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கூட்டணியில் இருக்கு. பாஜகவுடன் ரகசிய பேரம் நடத்துகிற இழிவான செயலலில் விஜய் அரசு ஈடுபடவில்லை. ஈடுபடாது.
ஆனால் எப்படியாவது, எந்த விதத்திலாவது இந்த அரசை கவிழ்த்துவிட வேண்டும் என நினைக்கிறாங்க.. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை எப்படியாவது பெற முடியுமா.. என எதாவது முயற்சி செய்து வருகிறார்கள்.

ஆட்சி அதிகாரம் போயிருச்சே

பொறுக்க முடியல.. ஆட்சி போயிருச்சே.. அதிகாரம் போயிருச்சே.. வர வேண்டிய கமிஷன் வரவில்லையே.. வந்து கஜானாவில் குமிந்துகொண்டே இருக்குமே.. எல்லாமே நின்னு போயிட்டே.. மணற் கொள்ளை நின்னு போயிடுச்சே.. டாஸ்மாக் நின்னு போயிடுச்சே.. கதவை புல்லா அடைத்துவிட்டானே.. எப்படியாவது ஆட்சியை கவிழ்த்துவிட்டு, அதிமுகவை ஆட்சி அதிகாரத்தில் அமர வைப்போம். நாம் ஆதரவு கொடுப்போம். நீங்கள் அப்படி முடிவு எடுத்தீர்கள் என கம்யூனிஸ்டு பேபி சொன்னார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் காதர் மொகிதீன் பொய்யே பேசாதவர். அவரே கூறினார். விஜய்யின் தவெக ஒரு காலமும் பாஜக பக்கம் சாயாது. அதனை நாம் நம்பலாம்.." என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+