6 மாதம் தான் ஆட்சியா? விஜய்க்கு எக்ஸ்ட்ரா 30 சீட்..திமுக ஆட்சிக்கு வரவே வராது? அடித்து சொல்லும் வைகோ

Subscribe to Oneindia Tamil

நெல்லை: லஞ்சம் வாங்கி பழக்கப்பட்ட அதிகாரிகளுக்கு பணம் இந்த ஆட்சியில் நின்று விட்டது. இந்த சர்க்காரை ஒழிக்க வேண்டும் என்று அதிகார வர்க்கம் செயல்படுகிறது. ஆறு மாதம் தான் இந்த ஆட்சியை நீடிக்கும் என எக்ஸ் சிஎம் சொல்கிறார். அதனையும் மீறி தேர்தல் வந்தால் கூடுதலாக விஜய் 30 சிட் வெல்வார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற மதிமுக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினரும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நெருக்கமானவர்களில் ஒருவருமான கள்ளத்தியான் மகன் பட்டாபிராம் - நித்யஸ்ரீ திருமண விழாவில் வைகோ பங்கேற்று தந்தையைப் போல் முன்நின்று திருமணத்தை நடத்தி வைத்தார்.

இதில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நெல்லை நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் மாநில துணைத் தலைவருமான ராபர்ட் புரூஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். மணமக்களுக்கு திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார் வைகோ.

Vaiko

வைகோ

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்," முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வளர்ப்பு மகன் நகை பட்டு ஆபரணம் அணிந்தார்கள் என குற்றம் சுமத்தினார்கள். ஆனால் இப்போது முன்னாள் முதல்வர் ஸ்டாலின் சூப்பர் ஸ்டார் ரஜினியை சேர்ந்த குடும்பத்தினர் கிரீஸ் நாட்டில் கல்யாணம் நடத்தியது குறித்து யாரும் விமர்சனம் செய்ய முன் வரவில்லை.

கிரேக்கத்தில் திருமணம்

உலகப் பணக்காரர் போல் கிரேக்கத்தில் சென்று திருமணம் நடத்தியதில் என்ன விதத்தில் நியாயம்?
வைகோ தவறை தவறு என சொல்வதை கவலைப் படமாட்டார். 91-2006 வரை பல ஆயிரக்கணக்கான குற்றம் நடந்து உள்ளது. ஜெயலலிதா, கலைஞர், ஓ.பி.எஸ், ஸ்டாலின், எடப்பாடி ஆட்சியில் நடந்தது. புள்ளி விபரதத்துடன் அனைவருக்கும் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி

காவல்துறை அதிகாரிகளை கூலிப்படையாக்கி பச்சை குழந்தைகளை சுட்டு கொன்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு நிவாரணமே கிடையாது. அருணா கமிசன் அறிக்கை அடிப்படையில் கூடுதல் நிவாரணம் முதல்வர் விஜய் மூலம் வழங்கப்பட உள்ளது. அனில் அகர்வால் கோடிகளை கொட்டி முதல்வர் விஜயை சந்திக்க முயன்றார். முதல்வரை சந்தித்து நான் அவரை சந்திக்க கூடாது என கேட்டு கொண்டேன். அதனை முதல்வர் ஏற்று ஸ்டெர்லைட் அகர்வாலை சந்திக்கவில்லை.

தவெக அரசு

லஞ்சம் வாங்கி பழக்கப்பட்ட அதிகாரிகளுக்கு பணம் இந்த ஆட்சியில் நின்று விட்டது. இந்த சர்க்காரை ஒழிக்க வேண்டும் என்று அதிகார வர்க்கம் செயல்படுகிறது. ஆறு மாதம் தான் இந்த ஆட்சியை நீடிக்கும் என எக்ஸ் சிஎம் சொல்கிறார். அதனையும் மீறி தேர்தல் வந்தால் கூடுதலாக விஜய் 30 சிட் வெல்வார். விஜய்க்கு ஆதரவாக வைகோ தெரு தெருவாக பிரச்சாரம் செய்வார்.

திமுக ஆட்சி

எத்தனை அபாண்ட பொய் பிரச்சாரம் செய்தாலும், அதனை தூள் தூளாக்க வைகோவும் மதிமுகவும் துணை இருக்கும். சிலரின் முட்டாள் தனமான பேச்சுக்கு பதில் சொல்ல முடியாது. ஒரு காலமும் திமுக ஆட்சிக்கு வராது வரவே வராது. திமுகவினருக்கு கோவில்களில் போடாத அரோகராவா இந்த ஆட்சியில் போடுகிறார்கள். பக்தர்கள் அரோகரா போட்டு இருக்கிறார்கள். அதில் என்ன தவறு உள்ளது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+