மாநாட்டில் இவர்தான் ஹீரோ.. யாருக்கும் 'நோ காசு. .நோ பிரியாணி'.. சாம்பார் தயிர் சாதம்தான்.. வைகோ
Recommended Video

சென்னை: அண்ணா பிறந்த நாள் மாநாட்டுக்கு யாரையும் பணம் கொடுத்து அழைத்து வரமாட்டோம் என்று கூறியுள்ள வைகோ, பிரியாணி வழங்கப்படாது என்றும் சாம்பார், தயிர் சாதம் மட்டுமே வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாள் விழாவை மதிமுக சிறப்பாக கொண்டாட தீர்மானித்துள்ளது. இதற்காக தொண்டர்களை அழைத்து பிரம்மாண்டமான மாநாடு நடத்தவும் வைகோ திட்டமிட்டுள்ளார். செப்டம்பர் 15 ஞாயிற்றுக் கிழமை பேரறிஞர் அண்ணாவின் 111 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு, சென்னை - நந்தனத்தில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காலை 8.30 மணிக்கு தொடங்குகிறது.

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது: இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி அண்ணாவின் பிறந்த நாள் விழாவை மிகவும் சிறப்பாக முழு நாள் மாநாடாக நடத்த உள்ளோம். மதிமுகவின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையப் போகிறது.
இந்த கூட்டத்திற்கு வரும் தொண்டர்கள் அமர்வதற்காக பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட உள்ளது. 75,000 பேருக்கு பகலில் சாம்பார் சாதம், தயிர் சாதம் வழங்க உள்ளோம். தொண்டர்களை பணம் கொடுத்து அழைத்து வரப்போவதில்லை. பிரியாணி வழங்கப்படாது, இந்த மாநாட்டில் பங்கேற்க வருமாறு பரூக் அப்துல்லாவை அழைத்துள்ளேன். அவர் வருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆகஸ்ட் 4ம் தேதி இரவு என்னிடம் பரூக் என்னிடம் பேசினார். . 5ம் தேதி காஷ்மீரை சிதைத்து விட்டார்கள். இந்த சமயத்தில் பரூக் அப்துல்லாவை தொடர்பு கொள்ள இயலவில்லை.. அவரை வீட்டுக் காவலில் மத்திய அரசு வைத்துள்ளது.
பரூக் அப்துல்லாவை எங்கள் மாநாட்டுக்கு முன்னதாக மத்திய அரசு வெளியேற்றாவிட்டால் பரூக் அப்துல்லாவுடன் தொடர்பு கொண்டு அடிப்படை உரிமையை வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடச்செயவேன்.இதன் மூலம் பரூக் அப்துல்லாவை எப்படியாவது அழைத்துவருவேன். அந்த மாநாட்டின் கதாநாயகனாக பரூக் அப்துல்லா திகழ்வார். திமுக தலைவர் முக ஸ்டாலின் மாநாட்டை தொடங்கி வைக்க உள்ளார்" என்றார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications