வெளிமாநிலங்களில் தவிக்கும் லாரி ஓட்டுநர்கள்... உணவுக்கு அரசு உதவி செய்யவேண்டும்- வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் தமிழக லாரி ஓட்டுநர்களுக்கு உணவு கிடைக்கும் வகையில் அரசு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Recommended Video

    தமிழக லாரி ஓட்டுநர்களுக்கு அரசு உதவ வேண்டும் - வைகோ

    மேலும், கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகமாவதை குறிப்பிட்டு தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் வைகோ.

    vaiko says, tn govt should help the truck drivers to get food on the other states

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

    கொரோனா என்றாலே நடு நடுங்க வைக்கின்ற இந்தக் கொடிய தொற்று நோய் அனைத்து மட்டத்திலும் வேகமாகப் பரவி வருகின்றது. உலகம் முழுவதும் இதுவரை ஐந்து இலட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். 24 ஆயிரம் பேர் இறந்து விட்டார்கள்.
    அறிவியலில் நாங்கள்தான் முதல் இடம் என்று சொல்லிக்கொண்டு இருந்த அமெரிக்காதான் இப்பொழுது இந்த நோயின் பாதிப்பில் முதல் இடத்தில் இருக்கின்றது. இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் ஏராளமானவர்கள் இறந்து விட்டார்கள்,

    இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் இந்த நோயின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும்? இது இன்னும் வீரியமாகுமா? அல்லது தணியுமா? என்பது ஒரு வார காலத்திற்குப் பிறகுதான் தெரிவிக்க முடியும் என்று மருத்துவ அறிஞர்கள் கூறுகின்றார்கள்.தமிழ்நாட்டைவிட்டு 20 நாட்களுக்கு முன்பு வெளி மாநிலங்களுக்குச் சென்றவர்கள், குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து வெளி மாநிலங்களுக்குச் சென்ற லாரி ஓட்டுநர்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி இருக்கின்றார்கள்.

    ஒரு லாரி ஓட்டுநர், ஐதராபாத்தில் இருந்து கதறுவதைக் காணொளியில் கண்டேன். சாப்பாடு இல்லாமல் நாங்கள் பட்டினி கிடக்கின்றோம். எங்களை அடிக்கிறார்கள். எங்களுக்கு நாதியே இல்லையா? என்று கேட்கிறார்கள். வெளி மாநிலங்களுக்குச் சென்ற லாரி ஓட்டுநர்கள் உட்பட்டோரைப் பாதுகாக்கவும், அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்பாட்டின் பேரில், தமிழ்நாடு தலைமைச் செயலாளரும், மற்ற அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+