சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"இருங்க வரேன்".. இதுக்குன்னே ஸ்ட்ரைட்டா கிளம்பி போயிட்டாராம் துரை வையாபுரி.. "டிட்டோ வைகோ".. செம்ம

மதிமுகவின் துரை வைகோ, உதயநிதிக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு, மதிமுகவின் தலைமை கழக செயலாளர், துரை வைகோ நேரில் சென்று தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்.

நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், இப்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

அவருக்கு நேற்று முதல் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. நேற்றெல்லாம் வாழ்த்து மழையில் நனைந்த உதயநிதிக்கு, இன்றும் பலர் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.

இந்தியா ஒரே நாடு அல்ல.. ராஜ்யசபாவில் பொது சிவில் சட்ட விவகாரத்தில் பேசிய வைகோ.. கொந்தளித்த பாஜக!இந்தியா ஒரே நாடு அல்ல.. ராஜ்யசபாவில் பொது சிவில் சட்ட விவகாரத்தில் பேசிய வைகோ.. கொந்தளித்த பாஜக!

 இளையராஜா

இளையராஜா

அந்தவகையில், இசையமைப்பாளரும் எம்பியுமான இளையராஜாவும் அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார்... அந்த ஆடியோவில், "மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்களே, உங்களை வாழ்த்துவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.. முக்கியமாக நான் சொல்ல நினைப்பது 'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்' என்று வள்ளுவன் சொல்வதைப் போல, அம்மாவுக்குத் தான் நீங்கள் அமைச்சரானது மிகவும் சந்தோஷமாக இருக்கும். உங்கள் அம்மா மகிழ்வதை நான் நினைத்துப் பார்க்கிறேன். நானும் மகிழ்கிறேன்.

வந்துட்டீங்க

வந்துட்டீங்க

இந்த அமைச்சர் பதவியின் மூலம், நல்ல முறையில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். நீங்கள் இறங்கிட்டீங்க; களத்தில் இறங்கிடீங்க; அரசியலில் வந்துட்டீங்க. அதனால் அமைச்சர் பதவி ஏற்றபிறகு பொறுப்பு அதிகமாகுது. அந்தப் பொறுப்பை சரிவர நிறைவேற்றி மக்களிடம் நல்ல பெயரும் புகழும் அடைய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். கண்டிப்பாக நிறைவேற்றி விடுவீர்கள் என நான் நம்புகிறேன்" என்று பேசியிருந்தார். இளையராஜாவின் இந்த வாழ்த்து பல தரப்பினராலும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.

 பொன்.ராதா

பொன்.ராதா

அதேபோல, பாஜகவின் மற்றொரு தலைவரான பொன்.ராதாகிருஷ்ணனும் தனிப்பட்ட முறையில் உதயநிதிக்கு வாழ்த்து சொல்லி உள்ளார்.. "தமிழகத்தை கெடுக்காமல் நிர்வாகம் செய்ய, புதிய அமைச்சரான உதயநிதி முன்வர வேண்டும். நல்ல முறையில் நிர்வாகம் செய்ய அவர் முன்வர வேண்டும் என தனிப்பட்ட முறையில் வாழ்த்துகிறேன்" என்று பொன்.ராதா கூறியிருந்ததும் பலரது கவனத்தை பெற்று வருகிறது.. எந்நேரமும் திமுகவை குறை சொல்லி குறிப்பாக, உதயநிதியையே பலமுறை குற்றஞ்சாட்டி வந்த காயத்ரி ரகுராம். கஸ்தூரி, போன்றோரின் வாழ்த்துக்களும் பரவலான கவனத்தை பெற்று வருகின்றன.

 துரை வைகோ

துரை வைகோ

இந்நிலையில் மதிமுகவின் துரை வைகோ, உதயநிதிக்கு மனமார வாழ்த்தை தெரிவித்துள்ளார்.. வரு தேர்தலில் துரை வைகோ தேர்தலில் போட்டியிடப்போவதாக அரசல் புரசலாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.. அதற்கேற்றபடி, துரைவைகோவின் அரசியலும் துரிதமாகி வருகிறது.. இந்நிலையில், இன்றைய தினம் நேரடியாகவே கிளம்பி சென்று, உதயநிதிக்கு வாழ்த்து சொன்னதுதான் இதில் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.. இதுகுறித்து ஸ்பெஷலாகவே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் துரை வைகோ.. அந்த அறிக்கையில், "தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, திமுக இளைஞர் அணிச் செயலாளர் அன்பு சகோதரர் உதயநிதி ஸ்டாலினை இன்று காலை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து அவருடைய பணிகள் சிறக்க வாழ்த்து தெரிவித்தேன்.

 மல்லை சத்யா

மல்லை சத்யா

இந்த நிகழ்வில், கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, தி.மு.இராசேந்திரன், கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியதேவன், சட்டமன்ற உறுப்பினர்கள் புதூர் மு.பூமிநாதன், அரியலூர் கு.சின்னப்பா, மருத்துவர் சதன் திருமலைக்குமார், மருத்துவர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன், மாவட்டச் செயலாளர்கள் கே.கழககுமார், டி.சி.இராசேந்திரன், சைதை பி.சுப்பிரமணி, ஊனை பார்த்திபன், பூவை மு.பாபு, ஆவடி இரா.அந்திரிதாஸ், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் சிக்கந்தர், மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் கனல் காசிநாதன், எழும்பூர் பகுதி செயலாளர் தென்றல் நிசார் ஆகியோர் உடனிருந்தார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

மறைந்த கருணாநிதியிடம் இருந்ததைபோலவே, முதல்வர் ஸ்டாலினிடமும், அளவுகடந்த மரியாதையையும் பாசத்தையையும் பொழிந்து வருபவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.. மிகச்சிறந்த பேச்சாளரும், பக்குவம் நிறைந்த அரசியல்வாதியுமான வைகோ, கட்சி தலைவர்களிடம் பிரத்யேகமான அன்பை பொழிபவர்.. விஜயகாந்த்தின் பிறந்தநாள் என்றாலும் சரி, கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யாவின் 100வது பிறந்தநாள் என்றாலும்சரி, திமுக தலைவராக ஸ்டாலின் ஒவ்வொரு முறை பொறுப்பேற்றபோதும்சரி, நேரிலேயே சென்று வாழ்த்துக்களை தெரிவித்து, பூரித்து போய்விடுவார் வைகோ.. இன்று வைகோ, வழியிலேயே துரைவைகோவும் நேரிலேயே சென்று உதயநிதியை வாழ்த்தியுள்ளது, அடுத்த தலைமுறையின் ஆரோக்கிய அரசியலாக பார்க்கப்பட்டு வருகிறது..!

English summary
Vaikos son Durai vaiko wishes minister udhayanidhi stalin, and releases statement
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X