வெற்றி படங்களை வெளியிட்ட உதயம் தியேட்டருக்கு மூடுவிழாவா! கண்கள் கண்ணீர் வடிக்கின்றன- வைரமுத்து வேதனை
சென்னை:நான் பாட்டெழுதிய பல வெற்றிப் படங்களை வெளியிட்ட உதயம் திரையரங்கம் மூடப்படுவதை கண்டு என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன என கவிஞர் வைரமுத்து வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது;
இதயம் கிறீச்சிடுகிறது
முதல் மரியாதை, சிந்து பைரவி,
பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன்
ரோஜா என்று
நான் பாட்டெழுதிய
பல வெற்றிப் படங்களை
வெளியிட்ட உதயம் திரைவளாகம்
மூடப்படுவது கண்டு
என் கண்கள்
கலைக் கண்ணீர் வடிக்கின்றன
மாற்றங்களின்
ஆக்டோபஸ் கரங்களுக்கு
எதுவும் தப்ப முடியாது என்று
மூளை முன்மொழிவதை
இதயம் வழிமொழிய மறுக்கிறது
இனி
அந்தக் காலத் தடயத்தைக்
கடக்கும் போதெல்லாம்
வாழ்ந்த வீட்டை விற்றவனின்
பரம்பரைக் கவலையோடு
என் கார் நகரும்
நன்றி உதயம்
இவ்வாறு வைரமுத்து தனது வருத்தத்தையும் வேதனையையும் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

1990களில் ரசிகர்களின் கொண்டாட்ட தலமாக இருந்த திரையரங்குகள் என சொன்னாலே அவை உதயம், தேவி, கமலா, ரோகிணி உள்ளிட்டவைதான். இவை சென்னையின் அடையாளங்களாகவும் இருந்தன. அசோக் நகரில் இயங்கி வரும் உதயம் தியேட்டரில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் ஆகிய திரைகள் இயங்கி வந்தன.
கடந்த சில ஆண்டுகளாக அந்த திரையரங்கிற்கு ரசிகர்களின் வருகை குறைந்துவிட்டது. மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வந்துவிட்டதால் பழைய தியேட்டர்களுக்கு வருவதை பெரும்பாலானோர் விரும்பவில்லை. இதனால் உதயம் திரையரங்கு பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டது.
இதற்கான ஒப்பந்தம் 10 நாட்களுக்கு முன்பு கையெழுத்தானது. உதயம் திரையரங்கு இருக்கும் இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்டப்படவுள்ளது. ஏற்கெனவே சாந்தி தியேட்டரும் மூடப்பட்டு அந்த இடத்தில் வேறு கட்டடம் கட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது உதயம் தியேட்டர் மூடுவது 70ஸ், 80ஸ் கிட்ஸ்களின் மனதை வலிக்க செய்கிறது.
சென்னையில் வாழும் நடுத்தர குடும்பத்தினர் குறைந்த விலையில் படம் பார்த்துவிட்டு வீடு திரும்ப ஏற்ற திரையரங்கமாக இது இருந்து வந்தது. இங்கு பார்க்கிங் கட்டணம், உணவு பண்டங்களின் கட்டணங்கள் எல்லாம் குறைந்த விலையில் இருந்தன. இந்த உதயம் திரையரங்கு கடந்த 41 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.
இங்கு ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்டோரின் படங்கள் வெளியாகி ரசிகர்கள் விசில் அடித்து உற்சாகத்தை கொண்டாடி படம் பார்த்த காலமுண்டு. இந்த தியேட்டர் 1.3 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இன்றுதான் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் வருவது பலருக்கு தெரியும். ஆனால் அந்த காலகட்டத்திலேயே உதயம் தியேட்டர் மல்டிபிளக்ஸ் திரையரங்காகவே இருந்தது.
வடபழனி, அசோக் நகர், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கே கே நகர், மாம்பலம் உள்ளிட்ட மக்களுக்கு இந்த தியேட்டர்தான் சொர்க்கம். ஆடி ஓடி கலைத்துவிட்டு வருவோருக்கு குறைந்த செலவில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தியேட்டர் உதயமாக இருந்தது. இன்று அந்த உதயம் அஸ்தமனமாகிறது என்பதை ரசிகர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.
கொரோனாவின் தாக்கம், ஓடிடியின் அசுர வளர்ச்சி உள்ளிட்டவற்றால் மக்கள் கூட்டம் தியேட்டர்களுக்கு வருவது குறைந்து போயுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. அந்த வரிசையில் உதயம் தியேட்டரும் இடம் பெறுகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications