கோள் மூட்டுபவர்களுக்கு கருணாநிதியை முன் வைத்து வைரமுத்து தந்த பதிலடி! இதோ! யார் அந்த முக்கிய புள்ளி?
சென்னை: கோள் மூட்டுபவர்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பதிலை வைத்து கவிஞர் வைரமுத்து ஒரு பதிலடியை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கலைஞருக்கும்,
அ.இ.அ.தி.முகவிலிருந்து
தி.மு.கவில் வந்து சேர்ந்த
ஒரு முக்கியப் புள்ளிக்கும்
நடந்த உரையாடல்
எனக்கு
வாய்மொழியாக வந்தது;
தயக்கத்தோடு
கலைஞரையே கேட்டு
உறுதி செய்தது
சொற்கள் மாறியிருக்கலாம்;
சொன்னபொருள் இதுதான்
'வைரமுத்த
ரொம்ப நம்பாதீங்க தலைவரே!’
'ஏன்? எதனால?’
'அவரு உங்களப்
புகழ்ந்து பேசுறாரே தவிர
ஜெயலலிதாவ எப்பவும்
திட்ட மாட்டேங்குறாரு’
(கலைஞர்
சிறு சிந்தனைக்குப் பிறகு)
'நீ அங்க இருந்து
இங்க வந்திருக்க
அங்க இருந்தபோது
என்னத் திட்டுன;
இங்க இருந்து
அந்த அம்மாவத் திட்டுற
வைரமுத்து
எப்பவும் இடம் மாறல
ஜெயலலிதா வைரமுத்துக்கு
எதிரியும் இல்ல
அவரு தமிழுக்காக
நம்மகூட நிக்கிறாரு
இன்னொண்ணு
அவரு யாரையும் திட்டமாட்டாரு;
அது அவரு இயல்பு’
கோள் சொன்னவர்
குறுகிப்போனார்
இப்படித்தான்
கேடுகள்
ஈட்டி எறியும்போதெல்லாம்
கேடயமாவது சத்தியம்
இவ்வாறு வைரமுத்து தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் பதிலை முன்னிறுத்தி தன்னை பற்றி முதல்வர் ஸ்டாலினிடம் சொல்வோருக்கு பதில் அளிக்கிறாரா என தெரியவில்லை. அண்மைக்காலமாக வைரமுத்துவுக்கும் இளையராஜாவுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. பாட்டு விவகாரத்தில் வந்த பிரச்சினையின் போது வைரமுத்துவை இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் கடுமையாக விமர்சித்திருந்தார்.
காப்புரிமை தொடர்பான விவாதத்தை கவிஞர் வைரமுத்து தான் கலந்து கொண்ட ஒரு விழாவில் முன் வைத்தார். அதாவது மொழி பெரிதா, இசை பெரிதா என பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசரில் தனது இசையை தன்னிடம் அனுமதி வாங்காமல் பயன்படுத்தியமைக்காக இளையராஜா தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த விவகாரம் குறித்து ரஜினிகாந்திடம் கேட்ட போது, அது தயாரிப்பாளருக்கும் இளையராஜாவுக்குமான விவகாரம், அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என சொன்னார். இந்த நிலையில் கருணாநிதியிடம் வைரமுத்துவை பற்றி கோள் மூட்டியவர் யார் என சமூகவலைதளத்தில் ஒரு விவாதமே எழுந்துள்ளது. பலர் பல விதமான பதில்களை அளித்து வருகிறார்கள்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications