"பேரறிவாளனுக்குத் திறந்த அதே வாசல் வழியாக..” - கவிதை வாயிலாக வேண்டுகோள் வைத்த வைரமுத்து!
சென்னை: பேரறிவாளனுக்குத் திறந்த அதே வாசல் வழியே சம்பந்தப்பட்ட ஏனையோரும் வெளிவர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், போபண்ணா அமர்வில் நடந்து வந்தது.

Recommended Video
இந்நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் பிரத்யேக அதிகாரமான 142-ஐ பயன்படுத்தி, பேரறிவாளனை விடுதலை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில், பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ள கவிஞர் வைரமுத்து, இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "இரும்புக் கம்பிகள் இளமையைத் தின்று தீர்த்தபிறகு ஒரு மனிதன் வெளியே வருகிறான். தமிழ்நாட்டு அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் வணக்கம். பேரறிவாளனுக்குத் திறந்த அதே வாசல் வழியே சம்பந்தப்பட்ட ஏனையோரும் வெளிவருமாறு வெளிவர வேண்டும் நீதிமன்றத்தின் நிமிர்ந்த தீர்ப்பு " எனக் குறிப்பிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.
-
69% இடஒதுக்கீடு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.. மனுக்கள் தள்ளுபடி.. என்ன நடந்தது? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications