மண்ணும் விண்ணும் எண்ணும் திருநாள் பொங்கல்... பட்டாடை உடுத்தி வாழ்த்துச் செய்தி கூறிய வைரமுத்து..!
சென்னை: உலகத் தமிழர்களின் உன்னத திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.

தனக்கே உரிய அழகுத் தமிழில் எழில் மொழி நடையில் அவர் கூறிய வாழ்த்து பின்வருமாறு;
''மண்ணும் விண்ணும்
எண்ணும் திருநாள்
உயிர்தோற்றத்தின் மூலங்களான
மண்ணுக்கும் விண்ணுக்கும்
தமிழர்கள் நன்றி சொல்லும்
தனிப் பெருநாள்
தைத் திருநாள்.
தமிழர் திருநாளில்
உலகத் தமிழர்கள்
உலகை
வாழ்த்துகிறார்கள்.
மண் வாழ்க;
விண் வாழ்க;
உயிர்கள் வாழ்க;
உறவுகள் வாழ்க !''

மேற்கண்டவாறு தமிழர் திருநாள் வாழ்த்தை வைரமுத்து கூறியிருக்கிறார். இந்த வாழ்த்துபாவை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார்.
இதில் என்ன கூடுதல் சிறப்பு என்றால் வழக்கமான தனது வெள்ளுடையை தவிர்த்து பட்டாடை உடுத்தி பரவசம் பொங்க உற்சாகம் மிக்க வார்த்தைகளால் அவர் பொங்கல் வாழ்த்து கூறியிருப்பது தான்.


Click it and Unblock the Notifications
