"தாடி சிங்கத்தின் தமிழ் கேட்டு என் மீசை முறுக்கின!" கமல்ஹாசனின் கன்னி பேச்சுக்கு வைரமுத்து பாராட்டு
சென்னை: நாடாளுமன்றத்தில் ராஜ்யசபா எம்பி கமல்ஹாசனின் கன்னிப் பேச்சு குறித்து கவிப்பேரரசு வைரமுத்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார். காடு அதிரட்டும் களிறே பிளிறு என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கமல்ஹாசன் எம்.பி அவர்களின்
நாடாளுமன்ற உரைக்கு
எனது பாராட்டும்
அவர் பேசி அனுப்பிய விடையும்
"அன்புள்ள
கமல் எம்.பி அவர்களே!
கன்னிப் பேச்சல்ல;
காளைப் பேச்சு
ஒரு தேசியவாதியின் மொழி
ஆனால்,
தமிழச் சாதியின் குரல்
நாடாளுமன்றமே
நிமிர்ந்து அமர்ந்தது
தாடிச் சிங்கத்தின்
தமிழ் கேட்டும்;
ஆங்கிலம் கேட்டும்
என்னையறியாமல்
மீசை முறுக்கின
என் கட்டை விரலும்
சுட்டு விரலும்
காடு அதிரட்டும்
களிறே பிளிறு" இவ்வாறு வைரமுத்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
டெல்லி நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எம்பி நேற்று முதல் முறையாக பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: மாநிலங்களவையில் பேசுவதை நான் கவுரவமாக கருதுகிறேன். என் சகோதரர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி, மக்களுக்காக பேசுவதற்கு பலர் மன்றத்திற்கு பல வழிகள் திறந்துள்ளன.
எனக்கான வழி திரையுலகம் மூலம் திறந்துள்ளது. பரமக்குடியில் பிறந்த குழந்தை திரையுலகம் மூலமாக தமிழ் மக்களுக்கு அறிமுகமானது. நான் எனது மொழியை ஆசிரியர்கள் வாயிலாக கற்றுக் கொண்டேன்.
அந்த ஆசிரியர்களில் ஒருவர் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா. எங்கள் மொழிக்கு எதிரான எந்த விதமான ஆக்கிரமிப்புகள் நடந்தாலும் அதை நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ள அவர் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
கமல்ஹாசன் எம்.பி அவர்களின்
— வைரமுத்து (@Vairamuthu) February 5, 2026
நாடாளுமன்ற உரைக்கு
எனது பாராட்டும்
அவர் பேசி அனுப்பிய விடையும்
“அன்புள்ள
கமல் எம்.பி அவர்களே!
கன்னிப் பேச்சல்ல;
காளைப் பேச்சு
ஒரு தேசியவாதியின் மொழி
ஆனால்,
தமிழச் சாதியின் குரல்
நாடாளுமன்றமே
நிமிர்ந்து அமர்ந்தது
தாடிச் சிங்கத்தின்
தமிழ் கேட்டும்;… pic.twitter.com/QlAj0d9zu9
பிரியசகோதரி பவதிபிச்சாந்தேகி என்று தெலுங்கில் இசாபாடி வந்த அந்த மாமனிதர், இசைமேதை தியாகராஜன், அவர் பிக்சாபாத்திரத்தில் இருந்து எடுத்த சில்லறைகள் நவீன காலத்திற்கு உதவாது என்று தெரிந்தவர்கள் நீங்கள். நீங்கள் வெள்ளைக்காரக் கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகளாய் ஆகிவிட்டன.
அதன் பிறகு உங்கள் பிச்சைப் பாத்திரம் உருமாற்றப்பட்டது. பிச்சைக்குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர் இன்று தமிழை, தமிழரை பார்த்து என்ன சொல்கிறீர்கள். தமிழ் பிச்சை எடுக்கக் கூட உதவாதா? ஓரளவு உண்மைதான்.
ஒரு தெற்கத்தி அறிவுரை தந்தாய். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே! தமிழ் பிச்சை எடுக்க உதவாது. திருடவும் உதவாது. தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான்.
தங்கச்சி ஓட்டையும், நாட்டையும் இந்த கமல்ஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கையே இல்லை, உங்களுக்கு இருக்கக் கூடும் என்ற நம்பிக்கையில் நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன. கருணையுடன் நீங்களே ஏற்பீர். உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொள்ளுங்கள்.
தமிழ் என்றும் வாழும் நலமுடன். அவை கண்டடைந்த தலைவர் கூட்டத்திற்கு வணக்கம். சென்றும் வருவேன், நாளை நமதே, உங்கள் கமல்ஹாசன் என பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications