இயற்கை... காதல்... கிராம வாழ்க்கை... வைரமுத்துவின் ‛நாட்படுத்தேறல் பருவம் 2’ வீடியோ வெளியீடு
சென்னை: கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் பருவம் 2 பாட்டுத்தொடர் ஏப்ரல் 17 முதல் வெளியாக உள்ளது. இந்நிலையில் பாடல் அறிமுக காட்சிகளை வைரமுத்து டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பனிபடர்ந்த மலை, ஓடும் நீரோடை என கண்களை குளிர வைக்கும் இயற்கைக்கு மத்தியில் காதல் காட்சிகள் , கிராம வாழ்க்கை என பல்சுவையுடன் இந்த வீடியோ அமைந்துள்ளது.
Recommended Video
தமிழ் திரையுலகில் சிறந்த கவிஞர், பாடலாசிரியராக திகழ்பவர் தான் கவிப்பேரரசு வைரமுத்து. இவர் நாட்படு தேறல் என்ற பெயரில் வாரம் ஒரு பாடல் வீதம் 100 பாடல்கள் உருவாக்கி வெளியிட முடிவு செய்தார். இதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்தார்.
அதன்படி 100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குனர்கள், 100 பாடகர்களுடன் கவிப்பேரரசு வைரமுத்துவின் 100 பாடல்கள் வெளிவர உள்ளது. நாட்படு தேறல் ஒன்று பாட்டுத்தொடர் முடிவடைந்த நிலையில் நாட்படு தேறல் 2 பாட்டுத்தொடர் பணிகள் நடந்து வந்தன. இந்த நாட்படு தேறல் பருவம் 2க்கான பாட்டுத்தொடர் ஏப்ரல் 17 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் கலைஞர், இசையருவி சேனல்களில் ஒளிபரப்பாக உள்ளது.

பாடல் காட்சி வெளியீடு
இந்நிலையில் நாட்படு தேறல் 2ம் பருவத்தில் இடம்பெற உள்ள பாடல்களின் காட்சிகளை கொண்டு ப்ரோமா வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‛சும்மா சுவை பார்க்க' என அவர் பதிவிட்ட அந்த வீடியோ 55 வினாடிகள் வரையிலான நீளம் கொண்ட இந்த வீடியோவில் பாடல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பல்சுவை வீடியோ
பனிபடர்ந்த மலை, ஓடும் நீரோடை, தோகை விரிக்கும் மயில் என கண்களை குளிர வைக்கும் இயற்கை காட்சிகள், பள்ளி மாணவர்கள், கிராம வாழ்க்கையை எடுத்துரைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், காதல் காட்சியும் கண்களை கொள்ளை கொள்கிறது. மொத்தத்தில் பல்சுவையுடன் இந்த வீடியோ வெளியாகி உள்ளது.

இயக்குனர்கள் யார் யார்
இந்த நாட்படுத்தேறல் 2ம் பருவத்தை பொறுத்தமட்டில் ஏற்கனவே பாடகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். பாடல் காட்சிகளை இயக்குனர் சிம்புதேவன், ‛மதயானைக்கூட்டம்' விக்ரம் சுகுமாறன், ‛பைரவா' பரதன், ‛சிட்டிசன்' சரவண சுப்பையா, ‛க/பெ ரண சிங்கம்' விருமாண்டி, இயக்குனர் தளபதி பிரபு, ரமேஷ் தமிழ்மணி, சரண், காந்தி கிருஷ்ணா, நடன இயக்குனர் ராதிகா, தேன்கணேஷ் விநாயகன், ‛காக்கா முட்டை' மணிகண்டன் ஆகியோர் இயக்கி உள்ளனர்.

இசையமைப்பாளர்கள் யார் யார்
பாடல்களுக்கு இசையமைப்பாளர்களாக வித்யாசாகர், யுவன் சங்கர்ராஜா, ஜிவி பிரகாஷ், ரமேஷ் விநாயகம், அனில் சீனிவாசன், சைமன் கே கிங், நவ்பல் ராஜா, அவ்கத், ரமேஷ் தமிழ்மணி, ஜெரார்ட் பெலிக்ஸ், வாகு மசான், இனியவன் உள்ளிட்டோர் இசையமைத்துள்ளனர். மேலும் எஸ்பி பாலசுப்பிரமணியம், சங்கர் மகாதேவன், பாம்பே ஜெயஸ்ரீ, ஹரிணி, கல்பனா, வைக்கம் விஜயலட்சுமி, விஜய் யேசுதாஸ், ஹரிசரண், பென்னிதயாள் உள்ளிட்டவர்கள் பாடல்களை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications