"இவர்களோடு மல்லுக்கட்டுவதை நான் அழகான சண்டை என்றே கருதுகிறேன்".. வைரமுத்து லேட்டஸ்ட் ட்வீட்!
சென்னை: "எமக்குத் தமிழ் சொல்லித்தரும் பணியில் ஈடுபடுகிறவர்களைப் பார்த்து நான் கோபம் கொள்வதில்லை; கும்பிட்டுச் சிரிக்கிறேன். நல்ல தமிழ் அறியாவிடில் கேட்டுக் கற்றுத் தெரிந்து தெளியுங்கள்" என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் தமிழில் எழுதுபவர்கள் செய்யும் தவறுகளைக் குறிப்பிட்டு, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.

வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில்,
சரியானதைப்
பழிப்பதன் மூலம்
தப்புக்குத்
தங்க முலாம் பூசாதீர்கள்
சமூக ஊடகங்களில்
நல்ல நகைச்சுவைகளைப்
பார்க்கிறேன்
தப்பும் தவறுமாய்த்
தமிழ் எழுதுகிறவர்கள்
சரியான எழுத்தைத்
தவறென்கிறார்கள்
'ட'ண்ணகரம் 'ற'ன்னகரம்
பொது 'ள'கரம் வகர 'ல'கரம்
எங்கே ஆளப்பட வேண்டும்
என்று அறியாதவர்கள்
தேவையில்லாத
திருத்தம் சொல்கிறார்கள்
வினைத்தொகையில்
வல்லெழுத்து மிகாது என்று
அறியாதவர்கள்
'ஊறுக்காய்' என்று எழுதித்
தமிழைப் புளிக்கவைக்கிறார்கள்
'நினைவுகூறுதல்' என்றே
எழுதிப் பழக்கப்பட்டவர்கள்
'நினைவுகூர்தல்' என்ற
சரியான சொல்லாட்சியைத்
தவறென்று சொல்லித்
தமிழின் கற்பைச்
சந்தேகப்படுகிறார்கள்
'எலும்புவில் தேய்மானம்'
என்று எழுதுவது தவறென்று
அறிந்தவர்கள் கூடக்
'கொழும்புவில் குண்டுவெடிப்பு'
என்று எழுதுகிறார்கள்
வருமொழி வடமொழியாகவோ
மெல்லொலியாகவோ இருப்பின்
வல்லெழுத்து மிகத்தேவையில்லை
என்ற பொதுவிதி அறியாதவர்கள்
எனது தண்ணீர் தேசம் நாவலில்
'த்' எங்கே என்று குத்துகிறார்கள்
திருநிறைசெல்வியே சரி
என்று தெரியாதவர்கள்
திருநிறைச்செல்வி என்று எழுதிப்
பிழையே சரியென்கிறார்கள்
இவர்களோடு மல்லுக்கட்டுவதை
நான் அழகான சண்டை என்றே
கருதுகிறேன்
எமக்குத்
தமிழ் சொல்லித்தரும் பணியில்
ஈடுபடுகிறவர்களைப் பார்த்து
நான் கோபம் கொள்வதில்லை;
கும்பிட்டுச் சிரிக்கிறேன்
நல்ல தமிழ் அறியாவிடில்
கேட்டுக் கற்றுத்
தெரிந்து தெளியுங்கள்
சரியானதைப்
பழிப்பதன் மூலம்
தப்புக்குத்
தங்க முலாம் பூசாதீர்கள்
தமிழ் வளர்ச்சித்துறை,
செம்மொழித் தமிழாய்வு
மத்திய நிறுவனம்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
தமிழ் வளர்ச்சிக் கழகம்,
உலகத் தமிழ்ச் சங்கம்
முதலிய அமைப்புகள்
தமிழர்களின் அன்றாடத்
தமிழோடு இயங்க வேண்டும்
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications