தமிழகத்தின் கதகதப்பான அரசியலுக்கு எச்.ராஜாவும் காரணம்! அவரை எள்ளி நகையாடாதீர்! வைரமுத்து உருக்கம்
சென்னை: பாஜக தலைவர்களுள் ஒருவரான எச்.ராஜாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருப்பது என் உள்ளத்திற்கு அதிர்ச்சியை தருகிறது, அவர் உடல்நலம் தேறி விரைவில் நலம்பெற வாழ்த்துகிறேன் என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: உடல் நலக் குறைவு என்பது
உலக நியதி

யாருக்கும் எப்போதும்
எதுவும் நேரலாம்
அது
எள்ளி நகையாடும்
பொருளன்று
பரிவு காட்டுவது
பண்பாடு;
நலம்பெற வாழ்த்துவது
நாகரிகம்
பா.ஜ.க
தலைவர்களுள் ஒருவரான
எச்.ராஜா அவர்கள்
உடல்நலக் குறைவு
கண்டிருப்பது
உள்ளத்திற்கு அதிர்ச்சி தருகிறது
அவர்
விரைவில் நலமுறவும்
விரும்பிய பணிகளை
ஆற்றி வரவும்
வாழ்த்துகிறேன்
தமிழ்நாட்டின்
கதகதப்பான அரசியலுக்கு
அவரும் ஒரு காரணம் என்பதை
மறுக்க முடியாது
@HRajaBJP
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் நலம் பெற அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications