"இன்னும் நீ இருக்கிறாய் அண்ணா!" பேரறிஞர் பிறந்தநாளில் கவிதை எழுதிய வைரமுத்து!
சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி வைரமுத்து ஒரு கவிதை எழுதி வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுக நிறுவனருமான அண்ணாதுரையின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. நவீன தமிழ்நாட்டின் சிற்பி என்றழைக்கப்படும் அண்ணா, அவர் மறைந்து அரை நூற்றாண்டு காலம் கடந்த பின்னும், இன்றைய அரசியலின் பேச்சாகவும் மூச்சாகவும் இருக்கிறார்.

அண்ணா தொடங்கிய கட்சியும், அண்ணா பெயரில் தொடங்கப்பட்ட கட்சியுமே கடந்த 57 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ளன. தமிழ்நாடு என பெயர் சூட்டியது முதல் சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட வடிவம் கொடுத்தது, இருமொழிக் கொள்கை வகுத்தது வரை அண்ணா விதைத்த விதை நவீன தமிழ்நாட்டின் முற்போக்குப் பாதைக்கு அடித்தளமாக அமைந்தது.
அறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அண்ணா நினைவாக கவிஞர் வைரமுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில்,
“இருமொழிக்கொள்கை
இறந்துபடவில்லை
மாநில சுயாட்சிக்கான
காரணங்கள் இன்னும்
காலமாகிவிடவில்லை
பகுத்தறிவின் வேர்கள்
பட்டுவிடவில்லை
இனமானக் கோட்டை
இற்றுவிடவில்லை
சமூக நீதிக்கொள்கை
அற்றுவிடவில்லை
மதவாத எதிர்ப்பு
மாண்டுவிடவில்லை
எப்படி நீமட்டும்
இறந்துபடுவாய் அண்ணா?
நிழல் விழுந்தால்
பொருள் இருக்கிறது
என்று பொருள்
லட்சியம் வாழ்ந்தால்
அந்த மனிதன் வாழ்கிறான்
என்று பொருள்
இன்னும் நீ இருக்கிறாய்
அண்ணா!
எங்கள் கொள்கை வணக்கம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications