இன்று தவெகவில் இணையும் வைத்திலிங்கம்? கொங்கு பகுதியை அடுத்து, டெல்டாவில் கைவைத்த விஜய்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த நிலையில், அடுத்த அதிரடியாக அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் இன்று விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.கொங்கு பகுதியை அடுத்து, டெல்டாவிலும் தவெக கைப்பற்றியுள்ளதாகவும் சவுக்கு சங்கர் கூறியுள்ளார். ஆனால் வைத்திலிங்கம் இதுபற்றி விளக்கம் அளித்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என்று குரல் எழுப்பினார். ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை சந்தித்தார். டெல்லிக்கும் சென்று வந்தார். ஆனால் ஓபிஎஸ் தரப்பை சேர்க்க எடப்பாடி பழனிசாமி இறுதிவரை ஒப்புக்கொள்ளவில்லை.. இதனால் இனி வேலைக்கு ஆகாது என்று நினைத்த செங்கோட்டையன், தனக்கு உரிய முக்கியத்தும் இல்லை என்பதாக நினைத்தார்.

அத்துடன் விஜய்யின் தவெகவில் இணைந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா காலத்தில் இருந்து இருக்கும் அதிமுகவின் மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
எனினும் செங்கோட்டையனுக்கு முன்பே பலர் தவெகவில் இணைய விரும்பினார்கள். ஆனால் யாருமே விஜய்யை எளிதில் அணுக முடியாத நிலை தான் இருந்தது.ஆனால் கரூர் சம்பவத்தால் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள் வேண்டும் என்று நினைத்த விஜய், அதன்பிறகே இறங்கி வந்தார். வரிசையாக மூத்த அரசியல்வாதிகளை இணைக்க முடிவு செய்தார். அதன்படி செங்கோட்டையனும், அதன்பிறகு அவரது ஆதரவாளர்களையும் இணைத்தார். அடுத்ததாக திமுகவில் இருந்த நாஞ்சில் சம்பத்தையும் விஜய் தனது கட்சியில் இணைத்தார்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள பதிவில், "முதியோர் இல்லம் ஆகிறதா தவெக ?77 வயதான செங்கோட்டையனை தொடர்ந்து, ஓபிஎஸ் அணியை சேர்ந்த 70 வயதான வைத்தியலிங்கம் நாளை (இன்று) தவெகவில் இணைகிறார்.
கொங்கு பகுதியை அடுத்து, டெல்டாவை கைப்பற்றியது தவெக." என்று கூறியுள்ளார். அடுத்தடுத்து அதிமுக தலைகள் மற்றும் அதிமுக முன்னாள் தலைகள் தவெகவை நோக்கி சேர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. திமுகவில் இருந்தும் சிலரை தவெகவிற்கு கொண்டுவரவும் வேலைகள் நடந்து வருகிறதாம். இது திமுக மற்றும் அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி! -
கே.என்.நேரு மீது FIR.. டெல்லிக்கு பந்தை திருப்பிய முதல்வர் விஜய்.. அமலாக்கத்துறை மாஸ்டர் ஆட்டம்? -
தன் பதவியையே காப்பாற்ற முடியாத ஜோதிடர்.. விஜய்க்கு வழிகாட்டுகிறாராம்! விளாசிய மா.கம்யூ., சண்முகம் -
நேரடி அரசியலில் விஜய்யின் நிழல்.. திருச்சி கிழக்கு தொகுதியில் ஜெகதீஷ் பழனிசாமி போட்டி? தவெக முடிவு! -
வாயில் இருந்து நல்லா வருமா?.. என்ன வரும் சிஎம் சார்?.. விஜய்க்கு உதயநிதி கேள்வி! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
வண்டடா வண்டில ஏறிய செ.பா.! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
முதல்வர் விஜய் குறித்து அம்மா ஷோபா சொன்ன ஒரு வரி... நடிகர் விவேக் குறித்தும் உருக்கம்.. விஷயம் இதுதானாம்! -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications