சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேனியில் போஸ்டர் அடிச்சதெல்லாம் வீணாகிபோலயே.. எடப்பாடியுடன் வைத்திலிங்கம் திடீர் சந்திப்பு

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய இணை அமைச்சராக தேர்வாக வாய்ப்பு என கூறப்படும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் வைத்திலிங்கம் திடீர் சந்திப்பு நடத்தியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. இதில் அதிமுக ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் அனைத்து தோல்வி அடைந்தன.

Vaithilingam meets CM Edappadi Palanisamy

இதையடுத்து தமிழகம் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கும் மத்திய அமைச்சர் பதவிக்கும் அதிமுகவில் போட்டா போட்டி நிலவுகிறது. கூட்டணி ஒப்பந்தபடி தங்களுக்கு ஒரு மாநிலங்களவை எம்பி பதவி வேண்டும் என பாமக கேட்கிறது. அத்துடன் தங்கள் கட்சிக்கு வாய்ப்பு கொடுங்கள் என தேமுதிகவும் கேட்கிறது.

மத்திய அமைச்சர் பதவி யாருக்கு... அதிமுகவில் பெரும் கோஷ்டி பூசல்.. 'பிக் பாஸ்' தீர்ப்பு என்னவோ! மத்திய அமைச்சர் பதவி யாருக்கு... அதிமுகவில் பெரும் கோஷ்டி பூசல்.. 'பிக் பாஸ்' தீர்ப்பு என்னவோ!

இந்த நிலையில் மகனை வெற்றி பெற வைத்தது போல் அவருக்கு மத்திய அமைச்சர் பதவியை வாங்கிக் கொடுத்தே ஆக வேண்டும் என ஓபிஎஸ் தீவிரமாக போராடி வருகிறார். ஆனால் எடப்பாடி தரப்போ மாநிலங்களவை எம்பியாக உள்ள வைத்திலிங்கத்துக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என கோரி வருகிறார்.

இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீட்டில் வைத்திலிங்கம் திடீர் சந்திப்பு நடத்தியுள்ளார். மத்திய அமைச்சராக தேர்வாக வாய்ப்பு என கூறப்படும் நிலையில் வைத்திலிங்கத்தின் இந்த சந்திப்பு பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஓபிஎஸ் மகனுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதற்கு கட்சியினர் யாரும் ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது. அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தி வருகிறார் என கூறப்படுகிறது.

எம்பியாவதற்கு முன்பே ஓ.பி.ரவீந்திரநாத் குமார் எம்பி என கல்வெட்டில் பொறித்து அளப்பறை செய்த அவரது ஆதரவாளர்கள் ஓபிஎஸ் மகனை மத்திய அமைச்சராகவே ஆக்கிவிட்டார்கள்.. போஸ்டரில்...!

English summary
Vaithilingam meets CM Edappadi Palanisamy in Greenway road house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X