நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. திபெத் பனிமலை உருகும்! நேபாள வெள்ளத்தை கணித்த வாக்கிய பஞ்சாங்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேபாள தீபத் எல்லையில் பனிப்பாறை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் பலியானோர் எண்ணிக்கை 600ஐ நெருங்கி உள்ளது. 2500க்கும் மேற்பட்டோர் மாயமானதாக சொல்லப்படும் நிலையில் உலகெங்கும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் 2026 2027 ஆண்டுகளில் சீனா அருகில் உள்ள திபெத் மலையில் பனிமலை உருக நேரிடும் என சுத்தவாக்கிய பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆச்சரியம் அளிக்கும் தகவலாக தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது எனவும் அந்த பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் நேபாள வெள்ளம் தான் தற்போது பேசப்படும் விஷயமாக மாறி இருக்கிறது. அந்நாட்டில் உள்ள புகழ்பெற்ற போடேகோஷி நதி நதியில் கடந்த 26 ஆம் தேதி ஏற்பட்ட பெரு வெள்ளப்பெருக்கு சீனாவை ஒட்டியுள்ள நேபாளத்தின் ஒரு பிராந்தியத்தையே ஒட்டுமொத்தமாக சாய்த்து இருக்கிறது.

Vakiya Panchangam Nepal Flood

போடேகோஷியின் கிளை நதியென சொல்லப்படும் லெண்டேயின் நீரோட்டத்தை பனிச்சரிவு தடுத்ததால் ஏரி உடைந்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. காய்ந்து கிடந்த ஆறுகளில் சுனாமியை மிஞ்சும் அளவுக்கு ஏற்பட்ட பெருவெள்ளம் அங்கிருக்கும் வீடுகள் பாலங்கள் என அனைத்தையும் தரைமட்டமாக்கிவிட்டு சென்றது.

நேபாள வெள்ளம்

வெள்ளத்தோடு பாறைகள், மண், சேறு கலந்து வந்த பெரும் பிரளயத்தால் பொதுமக்கள் பலரும் தங்கள் இன்னுயிரை இழந்து இருக்கின்றனர். சீனாவை ஒட்டி இருக்கும் எட்டு மாவட்டங்கள் நிலைகுலைந்து இருக்கும் நிலையில், ரசுவா, நுவாகோட், தடிங்க் ஆகிய மாவட்டங்கள் முற்றிலும் சீரழிந்துள்ளன. அப்பகுதி முழுவது, சேரும் சகதியுமாக உடல்கள் மிதக்கும் காட்சி பதற வைக்கும் அளவில் இந்த கோர காட்சிகளாக இருக்கிறது.

பனிப்பாறை

இமயமலையிலிருந்து பனிப்பாறை உருகி உடைந்து வெள்ளமாகி, மண், சேறு, பாறை என அடித்து வந்து பல அடி தூரத்துக்கு நிரப்பி இருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என அச்சப்படும் நிலையில் பலியானவர் எண்ணிக்கை 600 நெருங்கி இருக்கிறது. மேலும் ஆயிரக்கணக்கானோரை காணவில்லை என்பதால் இந்த பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சொல்லப்படுகிறது.

வாக்கிய பஞ்சாங்கம்

தற்போது மீண்டும் வெள்ளம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் இதுபோன்ற ஒரு மிகப்பெரிய இயற்கை பேரிடர் நிகழும் என சுத்தவாக்கிய பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. 2026-2027 சுத்த வாக்கிய சர்வமூத்த பஞ்சாங்கத்தில் தற்போது நிகழ்ந்து வரும் பல நிகழ்வுகள் முன்னரே கணிக்கப்பட்டுள்ளது.

கடும் பாதிப்பு

அயல் நாட்டில் தீ ஏற்படும். சூறாவளி காற்றால் கடும் பாதிப்பு ஏற்படும், ஆன்லைன் வர்த்தகத்தில் வட மாநில கும்பலின் மூலம் பல மோசடிகள் அரங்கேறும், அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படும், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் காவல்துறையில் கெடுபிடிகள் அதிகரிக்கும், வனத்துறை நவீன வளர்ச்சியால் சிறப்படையும், சித்த மருத்துவத்தில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கும், மக்களுக்கு தீராத விஷக்காய்ச்சல் பிரச்சனைகள் உண்டாகும். பொதுமக்களிடையே பணப்பழக்கம் இருக்காது. பொருள் ஏற்றத்தில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்காது. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.

கூட்டணி ஆட்சி

50 ஆண்டுகளுக்கு மேலாக தனித்தே அரசியல் கட்சிகள் தமிழகத்தை ஆண்டு வந்த நிலையில் கூட்டணி ஆட்சி அமையும் என கூறியதும் தற்போது பலித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. கோயில்களின் சொத்துக்களை மீட்க நேரிடும், இமாச்சல பிரதேசத்தில் ஒரிசா, காத்மாண்டு அதிகமான மழையால் பாதிக்கப்படும் எனவும், குறிப்பாக சீனா அருகில் உள்ள திபெத் மலையில் பனிகள் உருக நேரிடும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வெள்ளப்பெருக்கு

தற்போது நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்த வெள்ளப்பெருக்கு பனிப்பாறை உருகி உடைந்ததே காரணம் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டு இருக்கும் நிலையில் தற்போது அது நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதனை வாக்கிய பஞ்சாங்கம் ஏற்கனவே கணித்திருப்பது தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+