மக்கள் நீதி மய்யத்துக்கு வந்த புதுவரவு.. சட்டசபை இடைத்தேர்தலில் இரு தொகுதிகள் ஒதுக்கீடு
சென்னை: மக்கள் நீதி மய்யத்துக்கு ஆதரவு தருவதாக வளரும் தமிழகம் என்ற கட்சி அறிவித்துள்ளது. மேலும் சட்டசபை இடைத்தேர்தலில் கமல் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
மக்கள் நீதி மய்யத்துக்கு குடியரசு கட்சித் தலைவர் செ.கு. தமிழரசன் அண்மையில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து வளரும் தமிழகம் என்ற கட்சியும் மநீமவுக்கு ஆதரவு தந்துள்ளது.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில், மக்களின் பெரும் நம்பிக்கையுடன் வரவிருக்கிற 2019 நாடாளுமன்றம் மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தல்களை சந்திக்கவுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தனது ஆதரவையும் வாழ்த்துகளையும் வளரும் தமிழகம் கட்சி சார்பாக அக்கட்சித் தலைவர் துரை அரசன் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிட வேண்டியும் கோரிக்கை விடுத்திருந்தார். வளரும் தமிழகம் கட்சியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கமல்ஹாசன், அவர்களுக்கு வரவிருக்கும் தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் 2 சட்டசபை தொகுதிகளை ஒதுக்கிட முடிவு செய்தார்.
அதற்கான கூட்டணி உடன்படிக்கை இன்று கமல்ஹாசனால் ஒப்புதல் அளிக்கப்பட்டு கையெழுத்திடப்பட்டது. வளரும் தமிழகம் கட்சி, மக்கள் நீதி மய்யத்தின் சின்னமான டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications