Hug Day: கட்டிபிடிக்க ஒரு தினம்.. கொண்டாடும் 2கே கிட்ஸ்.. இதுல இவ்வளவு விஷயம் இருக்குதா?
சென்னை: காதலர் தினம் கொண்டாட்டமே கூடாது என கூறும் ஒரு பிரிவினரின் மத்தியில், காதலர் தினம் இப்போது ஒருநாள் அல்ல ஒரு வாரமாக நீடிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 14ம் தேதிக்கு ஒரு வாரம் முன்பிருந்தே காதலர் தினத்திற்கான முன் ஏற்பாடுகள் துவங்கி விடுகின்றன. ஒவ்வொரு நாளையும் ஒரு 'தினமாக' கொண்டாடுகிறார்கள் 2K காதலர்கள். ரோஸ் டே என ஆரம்பித்த இந்த தினங்கள், காதலர் தினத்தில் வைத்து நிலைகொள்வது வாடிக்கை.
அதில், நேற்று முக்கியமான டே.. ஹக் டே.. தமிழில் சொல்ல வேண்டுமானால் கட்டிப்பிடி தினம்.
— FullFormla (@Fullformla) February 12, 2019 |
கட்டிப்பிடி வைத்தியம்
சோஷியல் மீடியா முழுக்க ஏகத்துக்கும், "கட்டிப்பிடி.. கட்டிப்பிடிடா..கண்டபடி கட்டிப்பிடிடா.." டைப் மெசேஜ்கள் வெள்ளமென பாய்ந்தன. வசூல் ராஜா எம்பிபிஎஸ்லயே எங்க தலைவர் "கட்டிபிடித்தலின் கண்கவர் நலன்கள்" என பாடமே எடுத்துவிட்டார். இதிலும் எங்க ஆளு, நாஸ்டர்டாமஸ்தாங்க. உலக நாயகனா கொக்கா என கமல் ஹாசன் ரசிகர்கள் குதுகலிக்க, அதெல்லாம் பழசு, எங்க தலைவர் ராகுல் காந்தி, லோக்சபாவிற்குள்ளேயே மோடியை கட்டிப்பிடித்து அன்பை பரப்பியதுதான் இப்போ டிரெண்ட் என காங்கிரஸ்காரர்கள் கை உயர்த்த ஒரே குதுகலம்தான் போங்க.

கட்டிப்பிடிச்சா உடம்புக்கு நல்லதுப்பா
அது என்னப்பா கட்டிப்பிடிதினம்.. உவ்வே.. என 80ஸ், 90ஸ் கிட்ஸ் முகத்தை மட்டும் சுளிச்சிராதீங்கப்பா.. கட்டிப்பிடிச்சா, கண்டபடி ஹார்மோன் சுரந்து உடம்புக்கு நல்லதாம்.. அட உண்மைதாம்ப்பா.. பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டா லிவருக்கு நல்லதுன்னு, கவுண்டணி ஒரு படத்தில் சொல்வாரே அப்படி, இது ஆசைப்பட்டு அடிச்சி விடுற வார்த்தை இல்லை. உண்மையிலேயே, கட்டிப்பிடிச்சா உங்க சருமம் மினுமினுப்படையும் அப்படீன்னு சொல்லுது கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சி. கட்டிப்பிடித்தல் காரணமாக வயது முதிர்வு தள்ளிப்போகுமாம். கோபம், வெறுப்பு, தனிமை போன்ற கொடுமையான உணர்வுகளை விரட்டியடிக்கும் ஆற்றல் கட்டிப்பிடித்தலுக்கு உண்டாம்.

நாளும், கிழமையும் நல்லது செய்ய வேண்டாம்
அப்புறம் என்ன.. கண்ணா பின்னாவென்று கட்டிபிடிக்க வேண்டியதுதானே.. அய்யயோ 'ஹக்டே' போயிடுச்சேன்னு நினைக்கிறீங்களா.. டோன்ட் வொரி. "காதலுக்கு ஏது சன்டே, மன்டே.., கணக்கு பண்ணுங்க இன்றே.. இன்றேன்னு" முன்னோர்கள் சொல்லி வச்சத மறந்துடாதீங்க. முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. அதனால, எப்போ வேண்டுமானாலும் பிரியமானவர்களை கட்டித்தழுவுங்க, காதலில் ஜமாய்ங்க.

கிஸ் டே
அப்புறம் இன்னொரு கிளுகிளுப்பான விஷயத்தை சொல்ல மறந்துட்டோம்.. ஆமாங்க.. இன்னிங்கு என்ன டேன்னு நீங்க மைண்ட் வாய்ஸ்ல கேட்டது, சத்தமா வெளியே கேட்டுடிச்சி.. இன்னிக்கு நீங்க ஆவலோட எதிர்பார்த்த 'கிஸ் டே..' முத்த தினத்திற்கு எதுவும் முத்தான தகவல்கள் இல்லையான்னு நீங்க கேட்கலாம். அதற்குத்தான் அடுத்த பதிவில் பதில் இருக்கு. அதுக்குள்ள ஒரு வாட்டி கட்டிப்பிடிச்சிட்டு ஓடி வந்துருங்க பார்ப்போம்!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications