Kiss Day: மறந்துவிடாதீங்க.. இன்னிக்கு 'கிஸ் டே' பாஸ் ! முத்தம் பற்றி சில முத்தான தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காதலர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று கிளுகிளுப்பான ஒரு தினம் கொண்டாடப்படுகிறது. அதுதான் கிஸ் டே. முத்த தினத்தின் முத்தான சில தகவல்களை பற்றிதான் இப்போ நாம பார்க்கப்போகிறோம்.

"என்னது முத்தத்திற்கு ஒரு தினமா.." என்று முகம் சுளிப்பவரா நீங்க? அப்படியானால் நீங்க 2கே கிட்ஸ்சாக இருக்க முடியாது. நேற்று கட்டிப்பிடி தினம், இன்று முத்த தினம் என்று, மில்லினியம் கிட்ஸ் முன்னேறி போய்கிட்டே இருக்காங்க பாஸ்.

வாங்க.. வந்து நீங்களும் ஜோதியில ஐக்கியமாகுங்க.. அதுதான் கிட்னிக்கு நல்லது.

வாயையே எடுக்கல

வாயையே எடுக்கல

சரி அது என்ன முத்த தினம்? ஏன் இது கொண்டாடப்படுகிறது? சில முத்த தகவல்களை பார்ப்போம். உலகத்துலேயே ரொம்ப நேரம் முத்தம் கொடுத்து சாதனை படைச்சது தாய்லாந்து நாட்டின் எக்காச்சாய் திரானராட் மற்றும் லக்சானா திரானராட் ஜோடி. மொத்தம் 58 மணி நேரம், 35 நிமிடங்கள், 58 வினாடிகள் நீ...ள் முத்தம் இவர்களுடையது. பிப்ரவரி 12ம் தேதி ஆரம்பித்த முத்தத்தை பிப்ரவரி 15ம் தேதிதான் நிறைவு செய்தார்கள் (ஏம்ப்பா, அதுக்குன்னு பல்லு கூட வெளக்காமலா முத்தம் கொடுப்பீங்க).

முத்த தகவல்

முத்த தகவல்

இனி மேட்டருக்கு வருவோம்.. ஐயயோ.. இதான வேணாங்கிறது.. முத்த டே விஷயத்துக்கு வருவோம்னு சொன்னேன்! முத்தம்னு லேசுல எடுத்துவிட வேண்டாம். அதிலும் பல வரைட்டி காட்ட முடியும். கன்னத்தில் முத்தம் கொடுப்பது பலரும் அறிந்ததுதான். முத்தத்தில் வேறு பல வகைகளும் உள்ளன. கை முத்தம்- இது கையை உயர்த்தி பாட்ஷா படத்தில் தாதாக்கள் கொடுக்கும் முத்தத்தை போன்றது. "உங்க மேல, எனக்கு மானாவாரியா மரியாதை இருக்கு" அப்படீங்கிறதை சொல்வதுதான் இந்த முத்தம்.

பட்டாம்பூச்சி போல கண்கள் உரசட்டும்

பட்டாம்பூச்சி போல கண்கள் உரசட்டும்

பட்டர்ஃபிளை கிஸ்- உங்க ஜோடியை மிக நெருக்கமாக நின்று கட்டியணைத்தபடி தரும் முத்தம் இது. ஜோடிகளின் கண் இமை முடிகள் ஒன்றோடு ஒன்று உரச வேண்டும். அந்த அளவுக்கு நெருக்கமா நின்றபடி கொடுத்தால் அது பட்டர்ஃபிளை கிஸ். ஜோடிகள் எந்த அளவுக்கு ஒருவருக்கொருவர் அக்கறை வைத்துள்ளார்கள், நெருக்கம் கொண்டுள்ளார்கள் என்பதை காட்டிவிடும் இந்த முத்தம்.

உப்பு சப்பு இல்லாத முத்தம்

உப்பு சப்பு இல்லாத முத்தம்

ஏர் கிஸ்- ரொம்ப மொக்கையான முத்தம் இதுதான். என்ன சத்தம்தான் வருது முத்தம் வர்ல என்று அங்கலாய்க்க வைக்க கூடிய முத்தம் இது. ஜோடிகள் உடல்கள் தொட்டுக்கொள்ளாமல், காற்றிலேயே முத்தத்தை பறக்கவிட்டு கொடுப்பது.

கிளுகிளு கிஸ்

கிளுகிளு கிஸ்

பிரெஞ்ச் கிஸ்- டிவி சேனலில் வந்தால் கூட குழந்தைகள் பார்த்துவிட கூடாதுன்னு ரிமோட்டை தேட வைக்கும், ஏடாகூடமான முத்தம்தான் பிரெஞ்ச் கிஸ். உதட்டை கவ்வி, நாவை சுழற்றி, எச்சிலை உறிந்து.. ஐயய்யோ.., கேட்கும்போதே கிளுகிளுப்பானது. நம்மூர் காதல் ஜோடிகள் எளிதாக இதை செய்வதில்லை. கொஞ்சம் பழகிய பிறகுதான் புகுந்து விளையாட ஆசைப்படுவார்கள். பிரெஞ்ஸ் கிஸ்சுக்கு இன்னொரு பேரும் இருக்கு. ஃப்ளோரன்டைன் கிஸ். ஆஹா.. ஆஹா, பேருலயே எவ்வளவு வாசம். இதற்கு ஒரு எஸ்டிடி இருக்குது. அதாங்க வரலாறு. முதலாவது உலகப்போரின்போது, அமெரிக்கா மற்றும் பிரிட்டீஷ் படைகள் தங்கள் தாயகம் திரும்பியபோது, படை வீரர்கள் தங்கள் மனைவிகளை வெகு நாட்கள் கழித்து பார்த்த மகிழ்ச்சியில் கொடுத்த முத்தம்தான் இது. பிரெஞ்சுக்காரர்கள் காதல் நாயகர்கள் என்பதால், இந்த முத்தத்திற்கு பிரெஞ்சு முத்தம் என்றே பெயர் கிடைத்துவிட்டது. இதில் எந்த முத்தம் உங்கள் சாய்சோ அது பிரச்சினையில்லை. இன்று உங்கள் ஜோடிக்கு இதில் ஏதாவது ஒன்றை கொடுத்தே ஆக வேண்டும். ஆமா.. இது பஞ்சாயத்தோட தீர்ப்பு!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+