Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Valentines Day Wishes: உங்கள் அன்புக்குரியவர்களிடம் கவிதை மூலம் காதல் சொல்ல காதலர் தின வாழ்த்துக்கள்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகெங்கும் நாளை பிப். 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், உங்கள் அன்பான காதலன் அல்லது காதலிக்கு அனுப்பக்கூடிய வாழ்த்துகளை நாம் பார்க்கலாம்.

நாளை பிப்.14ஆம் தேதி காதலர் தினம் ( Valentines Day ) கொண்டாடப்படுகிறது. காதல் தான் இந்த உலகையே இயங்க வைக்கிறது என்றால் இதில் மிகை இல்லை. ஒவ்வொரு நாளும் கொண்டாட வேண்டிய ஒன்று தான் இந்த காதல்.

Valentines Day Wishes in Tamil for sending to your beloved lover

காதலனோ காதலியோ யாராக இருந்தாலும் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும். உலகிலேயே ஸ்பெஷல் ஆன நபர் நீ தான் என்பதை உணர்த்த என்ன செய்யப் போகிறோம் என்பதே கேள்வியாக இருக்கும்.

நீங்கள் ஏகப்பட்ட பரிசுகளைத் தரலாம்.. சர்ப்ரைஸ்கள் செய்யலாம்.. ஆனால், நீங்கள் அனுப்பும் வாழ்த்து மெசேஜ் எப்போதும் அவர்கள் மனதில் இருந்து நீங்காது. அப்படி காதலிக்கு நீங்கள் அனுப்பக் கூடிய வாழ்த்து செய்திகள் பற்றி நாம் இதில் பார்க்கலாம்.

1. என் வாழ்க்கையை வானவில் போல வண்ணமயமாக மாற்றியதற்கு நன்றி.. காதலர் தின வாழ்த்துகள்

2. ஒரு நாள்.. ஒரு நிமிடம்.. ஒரு நொடி.. வாழ்க்கை மொத்தமாக மாறும் என்று உணர்ந்தேன்.. உன்னை பார்த்த அந்த நொடி! அன்புடன் (பெயர்)

3. நீ அருகே இருக்கும் போது ஒவ்வொரு நாளும் காதலர் தினம் தான்.. அளவற்ற அன்புடன் (பெயர்)

4. கன்னங்கள் சுருங்கலாம்.. தலைமுடி நரைக்கலாம்.. ஆனால் உன் மீதான அன்பு என்றும் அணு அளவும் குறையாது

5. நானோ உன்னுடன் இல்லை.. நீயோ என்னுடன் இல்லை.. ஆனால் நம் அன்பு என்றும் இணைபிரியாதது.! காதலுக்கு காதலர் தின வாழ்த்துகள்

6. இரண்டு நிமிடம் பேசினாலும் 24 மணி நேரமும் உன் நினைவுகள் என்னை விட்டு விலகுவதே இல்லை.!

7. எல்லா ஆண்களும் 'தேவதை' போல் ஒரு காதலி வர வேண்டும் என்று விரும்புவார்கள்.. ஆனால் அந்த தேவதையே காதலியாக வந்தது எனக்குத்தான்!

8. அன்பே! என் இதயம் துடிக்கும் வரை உன்னை வரம்பற்று நேசிக்கும்.. இனி காதலர் தின வாழ்த்துகள்

9. நீ என் வாழ்க்கைக்குள் வந்தவுடன் எனது நாட்கள் அழகாகிவிட்டது.. உன் அளவுகடந்த அன்பிற்கு நன்றி!

10. உன் புன்னகையைப் பார்த்ததும் எனது துன்பங்கள் மணற்சிற்பத்தைப் போல நொறுங்கிப்போனது அன்பே! என்றென்றும் அன்புடன் (பெயர்)

11. உயிர் பிழைத்தல் வேறு... வாழ்வது வேறு என்பதை உணர வைத்தவள் நீ.. என்னை வாழ வைக்கும் அன்பிற்கு அன்பான காதலர் தின வாழ்த்துகள்.

12. நீ பார்த்த அந்த நொடி.. கரைந்தது காலம் மட்டுமில்லை.. எனது இதயமும் தான்! என்றென்றும் அன்புடன் (பெயர்)

13. கோபம் அழகானது என்பதை உன்னை பார்க்கும் போது தெரிந்து கொண்டேன் அன்பே! காதலுடன் காத்திருக்கும் (பெயர்)

14. வாழ்க்கையில் இருந்த வெறுமை மாயமானது.. வாழ்க்கையே வண்ணமயமானது உன்னால் மட்டுமே அன்பே!!

15. உன்னில் நானும், என்னுள் நீயுமாக, வாழும் நமக்கு தினமும் காதலர் தினமே!!

16. என் வாழ்வில் எவ்வளவு துன்பம் வந்தாலும் தாங்கிக் கொள்வேன் ஆறுதல் கூற நீ துணையாய் இருக்கும் போது!!

17. உன் கண் அசைவில் மயங்கிப் போனேன் நான்... மயக்கம் தெளியாமல் உன்னிடமே உன் நெருக்கத்தில் அடங்கிப் போகிறேன் நான்..

18. நீ விட்டு சென்ற மிச்சத்திலும் தொட்டு சென்ற வெக்கத்திலும் சிக்கி தவிக்கிறது என் நாணம் இனிய காதலர் தின வாழ்த்துக்கள் என் அழகியே!!

19. இடைவிடாது பேசும் உன் இதழ்கள் அழகென்றால் இடையிடையே பேசும் உன் விழிகள் பேரழகு இனிய காதலர் தின வாழ்த்துக்கள் என் அழகியே!!

20. என்னை மறந்து கொஞ்ச நேரம் உலகை ரசிக்க நினைத்தால் அங்கும் வந்துவிடுகிறாய் நானே உன் உலகமென்று இனிய காதலர் தின வாழ்த்துக்கள் என் உயிரே

இதையெல்லாம் உங்கள் காதலிக்கு அனுப்பி அவர்கள் மனதில் ஹார்டின்களை அள்ளலாம்.. அப்படி ஆங்கிலத்திலும் அனுப்ப ஒரு நாலு வாழ்த்து மெசேஜ் கிடைக்குமா என்பவர்களுக்கு இதோ..

1. Valentine, you occupy my heart.

2. You're the reason I am who I am today. Happy Valentine's Day, my love!

3. Every day I wake up next to you feels like Valentine's Day.

4. All you need is love. But a little chocolate doesn't hurt.

5. I love you because you're the person who annoys me the least.

இந்த மெசேஜ்களை அனுப்பி உங்கள் அன்பிற்குரியவர்களிடம் கலக்குங்கள்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+