உலகிலேயே முதல்முறையாக.. "விரல்" மாறிய பிளாஸ்திரி.. வால்பாறையே ஆடிப்போயிடுச்சு.. ஆனா "அண்ணாமலை" அசரலயே
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. என்ன காரணம்?
"என் மண் என் மக்கள் யாத்திரை"யில் அண்ணாமலை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.. முதல்கட்ட பயணம் வெற்றிகரமாக முடிந்துவிட்டதால், இப்போது இரண்டாம் கட்ட பயணத்தை அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார்.

அண்ணாமலை செல்லும் வழியெங்கும் மக்கள் கூட்டம் குவிகிறது.. கூடியிருந்த பொதுமக்களிடம் அண்ணாமலை சென்று பேசுகிறார்.. அவர்களிடம் நலம் விசாரிக்கிறார்.. வழி நெடுகிலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தவாறே உள்ளனர்..
பொதுமக்கள்: வழிநெடுகிலும் சாலையோரம் திரண்டிருந்த பொதுமக்களை பார்த்து அண்ணாமலை உற்சாகமாக கையசைத்தும், கும்பிட்டவாறும் நடந்து செல்கிறார். செல்லும் இடமெல்லாம் மறக்காமல், திமுகவையும் டேமேஜ் செய்தவாறே செல்கிறார்..
வால்பாறை: இந்நிலையில், ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. அதாவது, கடந்த வாரம் வால்பாறையில் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டிருந்தார்.. அப்போது, வாகனத்தில் ஏறும்போது, திடீரென அண்ணாமலையின் வலது கை, கட்டை விரலில் அடிபட்டுவிட்டது. இதனால், வாகனத்தில் ஏறிய பிறகும், கட்டை விரலை உதறியபடியே இருந்தார்.. இதையடுத்து நடந்த நிகழ்ச்சியிலும், மைக்கை பிடித்து பேசிக்கொண்டிருந்தார் அண்ணாமலை..
அண்ணாமலைலயின் கை விரலில் அடிபட்டதை, பாஜக பொதுச்செயலாளர் முருகானந்தம் பார்த்து பதறிப்போய்விட்டார்.. இதனால், உடனடியாக கட்சி தொண்டர்களிடம் பேண்ட் ஏய்ட் (BAND AID) வாங்கி வர சொல்லியிருக்கிறார். அவர்களும் பேன்ட் எய்ட் வாங்கி வந்துதந்தனர். அப்போது மைக்கை பிடித்து அண்ணாமலை சீரியஸாக பேசிக் கொண்டிருந்தார்.. இருந்தாலும், அவர் உரையாற்றி கொண்டிருந்தபோதே, அவரது கைவிரலில் பேண்ட் எய்ட் ஒட்டிவிட்டார் முருகானந்தம்.
வைரல் வீடியோ: இதில் என்ன ஒரு ஸ்பெஷல் என்றால், அண்ணாமலைக்கு அடிபட்டது வலது கை கட்டை விரல்.. ஆனால், பதற்றத்தில் இருந்த முருகானந்தம், அண்ணாமலையின் இடது கை ஆள்காட்டி விரலில் பேண்ட் எய்ட் ஒட்டினாராம். இதற்கு அண்ணாமலையும் எதுவுமே சொல்லாமல் அப்படியே விட்டுவிட்டாராம்..
இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. மாநில தலைவர் மீதான பாசம், இப்படி கண்ணை மறைத்துவிட்டதே என்று கமெண்ட்கள் விழுந்து கொண்டிருக்கின்றன.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications