சட்டசபை வளாகத்தில் ஒரே சிரிப்பு சப்தம்! போய் பார்த்தால் வானதியுடன் தாரகையும் நடத்திய அரட்டை அரங்கம்
சென்னை: விளவங்கோடு தொகுதியின் எம்எல்ஏ தாரகை கத்பர்ட்டை பாஜக மகளிரணியினருக்கு கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிமுகப்படுத்தி வைத்தார். எல்லா பெண்களும் ஒரே இடத்தில் சேர்ந்ததால் அட்டகாசமாக இருந்தது சட்டசபை வளாகம்.
விளவங்கோடு தொகுதி எம்எல்ஏவாக இருந்த விஜயதாரணி, கன்னியாகுமரி எம்பி சீட் கேட்டு காங்கிரஸ் கொடுக்காததால் அவர் அங்கிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து கட்சித் தாவல் தடை சட்டத்தால் விளவங்கோடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து லோக்சபா தேர்தலுடன் விளவங்கோடு சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியின் தாரகை கத்பர்ட் அதிக வாக்குகளை பெற்று வெற்றி வாகை சூடினார். அவர் விஜயதாரணியை விட அதிக வாக்குகளை பெற்று அவரது சாதனையை தாரகை முறியடித்தார்.
இதையடுத்து அவருக்கு சட்டசபை கூட்டத் தொடரின் போது சபாநாயகர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தற்போது சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சட்டசபை வளாகத்தில் ஒரு இடத்தில் காலையில் ஒரே பெண்கள் கூட்டமாக இருந்தது. உடனே செய்தியாளர்கள் அங்கே என்ன என பார்க்க சென்றனர்.
அப்போது பாஜக எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி ஆகியோருடன் காங்கிரஸ் எம்எல்ஏ தாரகையும் இருந்தார். தாரகை தனது ஊரில் உள்ள சுற்றுலாத் தலங்கள் குறித்து வானதிக்கு தெரிவித்து, தங்கள் ஊருக்கு வரும் படி அழைப்பு விடுத்தார். பின்னர் வானதியும் சட்டசபைக்கு வந்திருந்த மகளிர் அணியினரை தாரகைக்கு அறிமுகப்படுத்தினார்.
இதையடுத்து குழுவாக அங்கு அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஒரே அரட்டையாக இருந்தது. பிறகு கத்பர்ட், எல்லா பெண்களும் நல்ல நிலைக்கு உயரிய பதவிகளுக்கு வர வேண்டும் என கூறி வாழ்த்துக்களை கூறி விடைபெற்றார். இப்படியாக அந்த இடமே கலகலவென இருந்தது. பிறகு, தனக்காக சட்டசபைக்கு தென் மாவட்டங்களில் இருந்து வந்த மகளிரிடம் வானதி, "எனக்கு கூட்டத் தொடர் தொடங்க போகிறது. நீங்கள் எல்லாம் பீச்சுக்கு போய் பத்திரமாக விளையாடிட்டு வாங்க. உங்களை அப்புறம் பார்க்கிறேன்" என கூறிய அவர் கன்னியாகுமரி மாவட்ட மகளிர் அணி தலைவியிடம் , ஏம்மா உங்கள் ஊரிலேயே பீச் இருக்குல்ல என கேட்டார் வானதி.
வானதி எப்போதுமே கலகலப்பாக பேசக் கூடியவர். பத்திரிகையாளர் சந்திப்பிலும் சரி மிகவும் திறமையாக பதிலளித்து முகம் சுளிக்காமல் நடந்து கொள்வார். போட்டிகள் பல இருந்தாலும் கொள்கைகளில் வித்தியாசம் இருந்தாலும் வானதியும் கத்பர்ட்டும் பேசிக் கொண்டது, அதுவும் மகளிர் அணியுடன் பேசியது பெரும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தியது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications