‘இந்தியா’ கூட்டணி ஆலோசனை இருக்கட்டும்.. இந்த 10 கேள்விக்கு பதில் சொல்லுங்க.. கேட்பது வானதி சீனிவாசன்
சென்னை: 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்களின் இன்றைய மூன்றாவது கூட்டத்திலாவது கூட்டணியின் தலைவர் அதாவது பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வீர்களா? என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். வானதி சீனிவாசன், எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணிக்கு 10 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
'இந்தியா' கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் இன்று இரவு மும்பையில் தொடங்குகிறது. மும்பையில் இன்றும் நாளையும் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணியின் சின்னம் - கூட்டணியின் தேர்தல் முழக்கம், ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைப்பது மற்றும் தொகுதி பங்கீட்டை எப்படி தொடங்குவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் இந்த ஆலோசனைக் கூட்டத்தை ஆளும் பாஜக உன்னிப்பாக கவனித்து வருகிறது.

'இந்தியா' கூட்டணியின் மும்பை கூட்டம் தொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மும்பையில் இன்று (ஆகஸ்ட் 31) I.N.D.I.A. கூட்டணி கட்சித் தலைவர்களின் மூன்றாவது கூட்டம் நடைபெறுகிறது. அதனையொட்டி சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.
1. இந்த கூட்டத்திலாவது கூட்டணியின் தலைவர் அதாவது பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வீர்களா?
2. ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரின் கோரிக்கை பற்றி கூட்டணியில் மற்ற கட்சிகளின் கருத்து என்ன?
3. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் ஆகியோர் கூறியதற்கு கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் பதில் என்ன?
4. கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியுடன் டெல்லி, பஞ்சாப், குஜராத்தில் காங்கிரஸ் தேர்தல் கூட்டணி வைக்குமா? தொகுதிப் பங்கீடு செய்து கொள்ளுமா?
5. கேரளத்தில் காங்கிரஸுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைக்க முடியுமா?
6. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் எப்படி தொகுதி உடன்பாடு செய்து கொள்ளப்போகிறது?
7. உத்தர பிரதேசத்தில் 2017 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து படுதோல்வி அடைந்த சமாஜ்வாதி கட்சி, 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்கப் போகிறது? கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒதுக்கும் ரேபரேலி, அமேதி தொகுதிகள் மட்டும்தானா?
8. திமுக அமைச்சர்களின் பிரிவினைவாத பேச்சுகள் பற்றியும், அந்நிய ஆங்கிலத்திற்கு வெண் சாமரம் வீசிக் கொண்டு, இந்தி மொழிக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் செய்து வரும் திமுக பற்றி மும்பை கூட்டத்தில் விவாதிக்கப்படுமா? இது குறித்து கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் கருத்து என்ன?

9. மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதத்தை மட்டும் எதிர்க்கும் கட்சி. அனைத்து மக்களுக்கும் பொதுவான முதலமைச்சராக இருந்தும், மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வதில்லை. இதுபற்றி கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் கருத்து என்ன?
10. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான, திமுகவும் அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆனால், இப்போது நீட் தேர்வுக்கு எதிராக திமுக போராடி வருகிறது. நீட் தேர்வு இருக்காது என பொய்யான வாக்குறுதியை திமுக திரும்பத் திரும்ப அளித்து வருவதால் தமிழ்நாடு மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தாங்கள் ஆளும் மாநிலங்களில் நீட் தேர்வை அமல்படுத்தியுள்ள கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் நீட் தேர்வு குறித்து என்ன நினைக்கின்றன? திமுகவுடன் உடன்படுகிறதா? முரண்படுகிறதா? இன்னும் கேள்விகள் நிறைய இருக்கின்றன. திரும்பத் திரும்ப கேட்போம்." என்று தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications