ஆன்லைன் ரம்மி: ஆளுநரை போல் நீதிமன்றம் கேள்வி எழுப்பினாலும் சாம்பல் அனுப்புவீர்களா?.. வானதி கேள்வி

ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநரை போல் நீதிமன்றம் கேள்வி கேட்டாலும் சாம்பல் அனுப்புவீர்களா- தபெதிகவுக்கு வானதி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை விவகாரத்தில் ஆளுநர் கேட்ட கேள்வியை நீதிமன்றம் கேட்டிருந்தாலும் சாம்பல் அனுப்புவீர்களா என தந்தை பெரியார் திராவிடர் கழகத்திற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியிருந்தார்.

பாஜக மகளிர் அணி சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மறைந்த முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பெயரில் பெண்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.

இந்த விழா கோவை சித்தாபுதூர் பகுதியில் நடைபெற்றது. இதில் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் முடிவில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் விருது வழங்கப்பட்டு வருகிறது.

பெண்கள்

பெண்கள்

பிரதமரின் அரசு பெண்கள் தலைமை ஏற்க அனைத்து அரசு திட்டங்களையும் பெண்கள் முன்னேற்றத்தை மையப்படுத்தியே அமைத்து வருகிறது. 8 ஆண்டு காலத்திற்குள் 10 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு , அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், முத்ரா திட்டம் என மத்திய அரசின் திட்டங்களில் 65 சதவீதம் பெண்கள் பயனடைந்துள்ளார்கள். சுயதொழில் முனைவோர் திட்டத்தில் 85 சதவீதம் பெண்கள்.

அரசியலில் பெண்கள்

அரசியலில் பெண்கள்

பெண்கள் வாக்காளர்களாக மட்டுமே இருந்த நிலை மாறி அவர்கள் அரசியலில் சிறந்த வகையில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் எண்ணம், கடந்த இரு வாரங்களில் 420 பேர் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். சாதாரண தொண்டன் கூட இந்த கட்சியிலிருந்து வேறு கட்சிக்கு போகக் கூடாது என நினைக்கிறோம். சில நேரங்களில் தனிப்பட்ட ஆசையால் பாஜகவிலிருந்து வெளியேறுகிறார்கள். அவர்களை நாம் ஒன்றும் செய்ய இயலாது.

 பிளஸ் 2 தேர்வு

பிளஸ் 2 தேர்வு

தமிழகத்தில் இத்தனை பேர் பிளஸ் 2 தேர்வு எழுதாமல் இருக்கிறார்கள் என்றால் அரசு இதை தீவிரமாக யோசிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் மடிக்கணினி, புத்தகங்கள், மதிய உணவு, சைக்கிள்கள் என எத்தனையோ இலவசங்கள் இருந்தாலும் இவற்றையெல்லாம் தாண்டி அரசு பள்ளிளில் மாணவர்கள் சேருவதில்லை. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவருடைய துறையை கவனிக்க வேண்டும்.

போராட்டம்

போராட்டம்

நீட் தேர்வு விவகாரத்தில் தொடர் போராட்டம்தான் தங்கள் ரகசியம் என திமுக கூறியுள்ளது. இந்த ரகசியத்தையா அவர்கள் இவ்வளவுநாள் வைத்திருந்தார்கள். மக்களை ஏமாற்றுவதில் திமுகவில் தலைமை வேறுபாடு என்பதே இல்லை. திமுகவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் உதயநிதி சொல்லும் வாக்குறுதிகளை காப்பாற்றும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

அதிமுகவில் இருக்கக் கூடிய அடுத்த கட்ட தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஒரு சிலரிடம் கருத்து மோதல் இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இது ஒரு சிக்கலை உருவாக்கும். ஆனால் இதையெல்லாம் தேசிய தலைமையிடம் தெரிவிக்கப்பட்டு கடந்த வாரம் ஜேபி நட்டா கிருஷ்ணகிரி வந்த போது எங்கள் கட்சியில் அழைத்து இது போன்று விரும்பத் தகாத விஷயங்கள் நடைபெறாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.

 ரம்மி விளையாட்டு தடை

ரம்மி விளையாட்டு தடை

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தே கிடையாது. இந்த தடைச் சட்டம் கொணடு வரும் போது நாளை நீதிமன்றத்தில் அது செல்லுபடி ஆகக் கூடிய சட்டமா என்பதை ஆளுநர் கேட்டுள்ளார். இதே கேள்விகளை நாளை நீதிமன்றம் கேட்டால் தமிழக அரசு அல்லது தந்தை பெரியார் திராவிடர் கழகம் சாம்பல் அனுப்புமா. சாம்பல் அனுப்பும் போராட்டம் என எத்தனை போராட்டம் வேண்டுமானாலும் நடத்தட்டும். ஆன்லைன் ரம்மியை தடை செய்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். இவ்வாறு வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+