சட்டசபையில் பஞ்ச்! REEL ACTION வேண்டாம்... REAL ACTION வேண்டும்..! விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று இதற்கு முன்பு விஜய் பேசினார். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு இடத்தில் பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு, வன்முறை நடந்து கொண்டுதான் இருக்கிறது என முன்னாள் பாஜக எம்எல்ஏ வானாதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவராக 6 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்குப் பாராட்டு விழாவும், மத்திய அரசின் திட்டங்களுக்கான தொழில் பயிற்சி முகாமும் தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் நடைபெற்றது.

Vanathi Srinivasan

இந்நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் மாநில மகளிர் அணி தலைவி கவிதா ஸ்ரீகாந்த், மாநில இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜி. சூர்யா ஆகியோர் பங்கேற்றனர். மகளிர் அணியினர் வானதி சீனிவாசனுக்கு மலர் தூவி மகளிர் உற்சாக வரவேற்பளித்தனர்.

தொடர்ந்து பேசிய அவர்," தமிழ்நாடு மக்கள் குற்றச்சாட்டுகளை கூறுவதற்காக உங்களை முதலமைச்சர் ஆக்கவில்லை நடவடிக்கை எடுக்க எடுப்பதற்காக உங்களை முதலமைச்சர் ஆக்கி இருக்கிறார்கள்.
விஜய் தற்பொழுது லஞ்சம், ஊழல் இல்லை என்று கூறுகிறார். ஆனால் அதிக இடங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு தான் வேலை செய்து கொடுக்கிறார்கள.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று இதற்கு முன்பு விஜய் பேசினார். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு இடத்தில் பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு, வன்முறை நடந்து கொண்டுதான் இருக்கிறது. சட்டப்பேரவையில் முதல்வரின் பேச்சு..! REEL ACTION வேண்டாம்... REAL ACTION வேண்டும்..! தொழில் முதலீடுகள் ஆந்திராவுக்குச் செல்கிறது. தவெக ஆட்சியில் தமிழக தொழில்துறையின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. தொகுதி மறுவரையறை வரும்போது பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடும் வந்துவிடும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+