அமைச்சரை பாராட்டி தள்ளிய பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, குலுங்கி குலுங்கி சிரித்த வானதி சீனிவாசன்! என்னாச்சு?
சென்னை: சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சட்டசபையில் வைத்து, மனதார பாராட்டி உள்ளார் பாஜக எம்எல்ஏ சரஸ்வதி.
அதுவும் சும்மா கிடையாது.. சினிமா பஞ்ச் டயலாக் போல புகழ்ந்து பேசியிருக்கிறார் பாஜக எம்எல்ஏ.
மாசு இல்லாமல் பணியாற்ற வேண்டிய துறை அதை மாசோ போல வேறு யாரும் செய்ய முடியாது என்று சரஸ்வதி கூற அவையில் இருந்த அதிமுக தவிர்த்த அனைத்து கட்சி உறுப்பினர்களும் மேஜையை தட்டி அதை வரவேற்றனர்.

எதிரும் புதிரும்
தமிழக அரசியலில் எதிரும் புதிருமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன திமுக மற்றும் பாஜக இந்த முறை பாஜக நான்கு சட்டசபை உறுப்பினர்கள் பெற்றிருப்பதால் சட்டசபைக்குள் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் அழுத்தம் கொடுக்கும் என்று கூறப்பட்டது ஆனால் அரசு செய்யும் நல்ல விஷயங்களை பாராட்டியதற்கு பாஜக தயங்கவில்லை என்பதற்கு அந்தக் கட்சியின் மொடக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ சரஸ்வதி பேச்சு ஒரு உதாரணம்.

4 எம்எல்ஏக்கள்
பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை தோற்கடித்து வென்றார். நாகர்கோவில் தொகுதியில் பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி, திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனை வீழ்த்தி வென்றுள்ளார். திருநெல்வேலியில் முன்னாள் அமைச்சரும், பாஜக மாநில துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்றுள்ளார். மொடக்குறிச்சியில் பாஜக வேட்பாளர் சரஸ்வதி வெற்றி பெற்றுள்ளார். ஆக மொத்தம் 4 பேரவை உறுப்பினர்களை பெற்றுள்ளது பாஜக. 20 வருடங்கள் பிறகு சட்டசபைக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது பாஜக.

மாசு இல்லாத மா.சு
இந்த நிலையில்தான், மானிய கோரிக்கை மீது பேசினார் சரஸ்வதி எம்எல்ஏ. அவர் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டினார். மனதில் மாசு இல்லாமல் பணியாற்ற வேண்டிய துறை, நல்வாழ்வு துறை. மாசு இல்லாமல் செய்ய வேண்டிய அந்த சேவையை, மாண்புமிகு மா.சு (மா.சுப்பிரமணியனின் சுறுக்கப் பெயர்) போல வேறு யாராலும் செய்ய முடியாது என்று நான் கூறிக்கொள்கிறேன். இவ்வாறு சரஸ்வதி பேசியபோது, அதிமுக தவிர்த்த அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் மேஜையை தட்டி வரவேற்றனர்.

வானதி சீனிவாசன் சிரிப்பு
ஆனால், சக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் என்ன நினைத்தாரோ தெரியாது.. சரஸ்வதி பேசத் தொடங்கியது முதல் சிரித்துக்கொண்டே இருந்தார். சரஸ்வதியின் பின் இருக்கை வானதி சீனிவாசனுக்கு, ஒதுக்கப்பட்டிருந்தது. வானதி சீனிவாசன் சிரித்துக் கொண்டிருந்து அடக்க முடியாமல், ஒரு கட்டத்தில் தனது கையால் வாயை மூடிக்கொண்டு சிரிக்கிறார். அந்த காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது. அவையில் அவருக்கு அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்து இருந்த பிற உறுப்பினர்கள் யாரும் அவ்வாறு சிரிக்கவில்லை. எதற்காக சரஸ்வதி இவ்வாறு பேசும்போது வானதி சீனிவாசன் வேறு பக்கமாக பார்த்துக் கொண்டு இவ்வளவு குலுங்கி குலுங்கி சிரித்தார் என்பதுதான் தெரியவில்லை.
-
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications