என்ன ஆணவம் இது.. எப்படி அந்த வார்த்தையை யூஸ் பண்ணலாம்? கொதித்து போன வானதி.. நேரடி அட்டாக்!
சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறைக்கு எதிராக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோபமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பள்ளி பாட புத்தகங்களில் மத்திய அரசு என்ற வார்த்தையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை நீக்க போவதாக தகவல்கள் வந்துள்ளன. இதற்கு பதிலாக ஒன்றிய அரசு என்ற வார்த்தையை தமிழ்நாடு அரசு பயன்படுத்தும் திட்டத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. '
அதேபோல் பள்ளி பாட புத்தகங்களில் கவர்னரின் அதிகாரம் குறித்து இடம் பெற்றிருக்கும் பாடத்திட்டங்களிலும் மாற்றம் செய்ய உள்ளதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த செய்தி இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இதற்கு எதிராக விமர்சனம் வைத்துள்ளார்.

தமிழ்நாடு
அதில், தமிழ்நாட்டில் கடந்த வருடம் மே மாதம், 'திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் அனைவரும் மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என்று பேசவும், எழுதவும் தொடங்கினர். திமுக கூட்டணி கட்சித் தலைவர்களும், 'ஒன்றிய அரசு' என்ற சொல்லையே பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் எப்படி அழைத்தாலும் பிரச்சனை இல்லை. ரோஜா பூவை எப்படி அழைத்தாலும் அதன் குணம் மாறாது.

ஒன்றிய அரசு
மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என்று சொல்வதில் பாஜகவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. மத்திய அரசை, எந்தப் பெயரில் அழைத்தாலும் அரசியலமைப்பு சட்டப்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறையப் போவதில்லை. ரோஜா பூவிற்கு எப்படி குணம் மாறாதோ அப்படித்தான் மத்திய அரசுக்கும் அதிகாரங்கள் மாறாது. ஆனால், தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக, மக்களிடம் பிரிவினை சித்தாந்தத்தை விதைக்கும் உள்நோக்கத்துடன் பயன்படுத்தி வரும் 'ஒன்றிய அரசு' என்ற சொல்லாடலை, பாடப்புத்தகங்களிலும் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வந்திருக்கும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

ஆட்சி அதிகாரம்
தங்களிடம் ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, தாங்கள் என்ன நினைக்கிறார்களோ அவற்றையெல்லாம் திமுக அரசு செய்து வருகிறது. திடீரென 'ஒன்றிய அரசு' என்று சொல்வதற்கு பின்னால், மக்களிடம் பிரிவினை சித்தாந்தத்தை விதைக்கும் உள்நோக்கம் ஒளிந்திருக்கிறது என்பது தமிழக மக்கள் நன்கறிவார்கள். பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது. அரசியலமைப்பு சட்டத்தின்படி, மத்திய அரசுக்கு இருக்கும் அதிகாரங்கள், பொறுப்புகள் பற்றி, தவறாக பள்ளிக் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது என்பது, அவர்களின் மனதைக் கெடுக்கும் செயல்.

உண்மையான வரலாறு
நாட்டின் உண்மையான வரலாற்றை, மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றே பாஜக அப்படி செய்தது. அதை விமர்சனம் செய்தவர்கள் இப்போது இப்படி செய்கிறார்கள். அதன் ஒரு பகுதியே, பள்ளி பாடப்புத்தகங்களில், 'மத்திய அரசு' என்பதற்குப் பதிலாக 'ஒன்றிய அரசு' என்று திருத்தம் செய்வது. இது, திமுகவின் அரசியல் அதிகார ஆணவத்தையே காட்டுகிறது. இந்தியா என்கிற நாடு, மாநிலங்கள் சேர்ந்து உருவாக்கிய ஒன்றியம் என்பது போல், முதலமைச்சரும், அமைச்சர்களும் பேசி வருகின்றனர்.

அரசியல் விளையாட்டு
திமுகவினர் தங்களின் அரசியல் விளையாட்டை, அரசியலோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். 1947-ல் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த போது, இப்போதிருக்கும் மாநிலங்கள் இல்லை நிர்வாக வசதிக்கு ஏற்றபடியே மாநிலங்கள் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. மத்திய அரசு கல்வியில் மாற்றங்களை கொண்டு வரும் போதெல்லாம் அதை காவி மயம் என்று விமர்சனம் செய்தனர்.

பாடங்களை நீக்குங்கள்
இந்தியாவில் இருக்கும் கோவில்களை இடித்து, மக்களை கொன்று குவித்தவர்களை புகழும் பாடங்களை நீக்கிய போது அதை காவி என்றார்கள். இப்போது இவர்கள் தங்கள் அரசியலை பாடத்தில் புகுத்த பார்க்கிறார்கள். திமுக அரசாக, திமுகவின் பிரிவினை சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கான அரசாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கான அரசாக செயல்பட வேண்டும். பாடப்புத்தகங்களில் ஒன்றிய அரசு என்று மாற்றம் செய்வதை கைவிட வேண்டும், என்று வானதி சீனிவாசன் விமர்சனம் வைத்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications