"திமுக + பாஜக".. என்ன நடக்கிறது தமிழகத்தில்?.. "அவர்" சொல்வது சரி என்கிறாரே வானதி.. அப்படின்னா?
சேகர்பாபுவின் கருத்துக்கு பாஜகவின் வானதி சீனிவாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்
சென்னை: அமைச்சர் சேகர்பாபுவின் கருத்தை, பாஜகவின் வானதி சீனிவாசன் வரவேற்றுள்ளார்.. தமிழக அரசுக்கு மறைமுகமாக பாராட்டும் தெரிவித்துள்ளார்.. இதுதான் தற்போதைய ஹாட் டாபிக்காக உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்டினப்பிரவேசம் விவகாரம் தலைதூக்கியது.. முதலில் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், ஆதினங்கள், இந்து அமைப்புகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தருமபுர ஆதின பட்டின பிரவேசத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அரசின் இந்த அனுமதியை திராவிட கழகத் தலைவர் வீரமணி கடுமையாக விமர்சித்திருந்தார்... சிலரை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த அரசு எடுக்கும் முடிவுகள் ஒருகட்டத்தில் இந்து அமைப்புகள் அரசுக்கு எதிராக செயல்படுவதற்காக வாய்ப்பாக அமைந்துவிடும் என்று எச்சரித்திருந்தார்.

ஆன்மீக அரசு
ஆனால், இதுகுறித்து இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ஒரு பேட்டி தந்திருந்தார்.. "இது அனைவருக்குமான அரசு.. பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு பயத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கவில்லை, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்வு என்பதால் ஆதினங்கள் கோரிக்கைக்கு ஏற்ப அனுமதி வழங்கப்பட்டது.. ஆத்திகர்- நாத்திகர் என அனைவருக்குமான அரசாக தமிழக அரசு உள்ளது" என்றார்.

பட்டினப்பிரவேசம்
ஏற்கனவே பட்டினப்பிரவேசத்துக்கு அனுமதி தந்ததன் மூலம், திமுக அரசு பணிந்துவிட்டது என்று பலரும் விமர்சித்திருந்த நிலையில், ஆத்திகர் - நாத்திகர் என அனைவருக்குமான அரசாக தமிழக அரசு உள்ளது என்று சேகர் பாபு கூறியிருந்ததும், கிட்டத்தட்ட பொதுவான பொருளையே உணர்த்துவதாக இருந்தது.. அதேபோல, நேற்றைய தினம் சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சேகர் பாபு, அன்னை தமிழில் அர்ச்சனை என்பது கட்டாயமில்லை, வாய்ப்புள்ள இடங்களில் அமல்படுத்தப்படும் என்று கூறியிருந்தார்.

வானதி சீனிவாசன்
ஆரம்பத்தில் கறார் தன்மையுடன் சொல்லிவிட்டு, இப்போது தமிழில் அர்ச்சனை கட்டாயமில்லை என்று அமைச்சர் சொன்னது, பரவலாக விவாதத்துக்கு உள்ளாகி வருகிறது.. சேகர்பாபு சொன்ன இந்த கருத்தைதான் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் வரவேற்றுள்ளார்.. பாராட்டியும் உள்ளார்,.. தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் சொன்னதாவது:

தமிழில் அர்ச்சனை
"இறைவனை வணங்க மொழி தடையாக இருக்கக் கூடாது என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு.. அதேசமயம், எந்த மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது பக்தர்களின் உரிமை சார்ந்தது.. ஏற்கனவே கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று போர்டு உள்ளது.. பக்தர்கள் விரும்பினால் தமிழிலும் அர்ச்சனை செய்து கொடுக்கின்றனர்.. தமிழில் மட்டுத்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று யாரையுமே வற்புறுத்த முடியாது.. மக்களாக விரும்பி ஏற்றுகொள்ளாத வரை இதை அமல்படுத்துவது கடினம் என்று அமைச்சர் சேகர்பாபு சொல்லி இருப்பது சரியானதே..

அர்ச்சனை
இது பக்தர்களின் உணர்வு தொடர்பான விஷயம்.. தமிழில் அர்ச்சனை செய்ய கேட்டு, அதை செய்ய மறுத்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கலாம்... முதலில் அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை தெரிவித்த அரசு இப்போது கட்டாயமில்லை என்று நிலைப்பாடு மாற்றம் செய்து இருக்கின்றதா? என்ற கேள்விக்கு, ஏதார்த்தம் என்ன என்பதை அரசு புரிந்து இருக்கின்றது.. தமிழில் இறைவனை வழிபட அனைத்தும் இருக்கின்றது.. அரசு மத விஷயங்களில் தலையிடாமல் இருப்பதுதான் நல்லது என்பதை தமிழக அரசுக்கு மெல்ல புரிய துவங்கி உள்ளது" என்றார் வானதிசீனிவாசன்.
-
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
10 தொகுதிக்கு குறையக்கூடாது.. 3 காரணங்களுடன் மோத தயாரான விசிக.. திமுகவுக்கு அடுத்த நெருக்கடி -
விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? நேர்காணலின் போது திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி! -
BJP- TVK- DMK: தவெகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் திமுகவில் ஐக்கியம்! -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
திமுகவில் நேர்காணல்! ஓபிஎஸ் பிரசென்ட்! கனிமொழி ஆப்சென்ட்! என்ன காரணம்? -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின்












Click it and Unblock the Notifications