நம்புனா நம்புங்க.. விஜயை திடீரென பாராட்டிய பாஜக.. அந்த டிவிட்தான் ஹைலைட்.. புகழ்ந்து தள்ளிய வானதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயை திடீரென பாஜகவின் மூத்த தலைவர் வானதி சீனிவாசன் புகழ்ந்து இருப்பது பெரிய ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

2020 முழுக்க பல்வேறு திருப்பங்களும், எதிர்பாராத சம்பவங்களும் நடந்தபடி இருக்கிறது. தற்போது அப்படி நடந்து இருக்கும் ஒரு சம்பவம்தான் நடிகர் விஜயை பாஜக பாராட்டிய நிகழ்வு.

அட.. விஜயை பாஜகவின் உறுப்பினர் ஒருவர் பாராட்டி இருக்கிறார். இதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் பாஜக மற்ற நடிகர்களை பாராட்டுவதற்கும் விஜயை பாராட்டுவதற்கும் நிறைய்ய்ய்ய வித்தியாசம் இருக்கிறது.

என்ன செய்தார்

என்ன செய்தார்

நடிகர் விஜய் நேற்று டிவிட்டரில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க பெரிய வைரலானது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை பின்பற்றி விஜய் தனது வீட்டில் செடி நாட்டார். மாஸ்டர் பட லுக்கில் மாஸாக விஜய் செடி நட்ட போட்டோ இணையம் முழுக்க பலரை கவர்ந்து இருக்கிறது. நடிகர் விஜய் நேற்று டிவிட்டரில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க பெரிய வைரலானது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை பின்பற்றி விஜய் தனது வீட்டில் செடி நாட்டார். மாஸ்டர் பட லுக்கில் மாஸாக விஜய் செடி நட்ட போட்டோ இணையம் முழுக்க பலரை கவர்ந்து இருக்கிறது.

 பசுமை இந்தியா

பசுமை இந்தியா

பசுமை மற்றும் ஆரோக்கியமான இந்தியாவிற்காக..உங்களை பின்பற்றி செடி நடுகிறேன் என்று விஜய் மகேஷ் பாபுவை டேக் செய்து இருந்தார். தெலுங்கு பேன்ஸ், விஜய் பேன்ஸ் மட்டுமின்றி அஜித் ரசிகர்கள்.. யாருக்கும் சப்போர்ட் செய்யாத மையத்தினர் தொடங்கி எல்லோரும் விஜயின் இந்த க்யூட் போட்டோவை புகழ்ந்து தள்ளினார்கள்.

பாஜகவின் உறுப்பினர்

பாஜகவின் உறுப்பினர்

அப்போதுதான் பாஜகவின் மூத்த உறுப்பினர் வானதி சீனிவாசனும் விஜய்யை புகழ்ந்து டிவிட் போட்டார். ஆம் நீங்கள் சரியாகத்தான் படிக்கிறீர்கள்.. பாஜகவின் உறுப்பினர் ஒருவர் விஜயை புகழ்ந்துள்ளார். வானதி சீனிவாசன் தனது டிவிட்டில் இளைய தலைமுறைக்கு "பசுமை" யைப்பற்றி கூற விழையும் நடிகர்கள் திரு.விஜய், & திரு மகேஷ் பாபு இருவருக்கும் வாழ்த்துக்கள்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

#GreenIndiaChallenge க்காக இவர் செடி நடுவதை பாராட்டுகிறேன். உங்கள் ரசிகர்கள், பின் தொடர்பாளர்களையும் செடி நட வைத்து இந்தியாவின் சுற்றுசூழலை மாற்ற வழி செய்யவும், என்று வானதி சீனிவாசன் டிவிட் செய்துள்ளார் . இதை பார்த்த விஜய் பேன்ஸ் கண்ணை ஒருமுறை கசக்கி கையை ஒருமுறை கிள்ளி பார்த்துள்ளனராம்.. ஆம் தமிழகத்தில் பாஜக தலைவர் ஒருவர் விஜயை நேரடியாக பாராட்டி இருக்கிறார்.

மெர்சல் மோதல்

மெர்சல் மோதல்

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வசனம்,ஜோசப் விஜய் சர்ச்சை, அதன்பின் சர்க்கார் படத்தில் அரசை எதிர்த்து பேசியது என்று பல விஷயங்களை விஜய்க்கும் பாஜகவிற்கு மோதலிருக்கிறது. விஜய் தனது குட்டி கதையில் கூட பாஜகாவை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். அதோடு குட்டி ஸ்டோரி பாடலில் கூட சில ரெபரென்ஸ் பாஜகவை விமர்சனம் செய்யும் வகையில் இருக்கும்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இதனால் விஜய் - பாஜக என்றாலே மோதல் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் திடீரென்று விஜயை வானதி சீனிவாசன் புகழ்ந்து உள்ளார். அதோடு அவரின் கமாண்ட் பதிவில் பாஜகவினர் பலர் விஜயை புகழ்ந்து இருக்கிறார்கள். வரிசையாக விஜயை பாராட்டி டிவிட்கள் பறக்கிறது. அட ஏன் திடீர்னு பாஜகவினர் இப்படி மாறிட்டாங்க என்று விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+