பீடி, சிகரெட்.. ஆண்களை பற்றி பேசிய வானதி.. இப்படி கேட்கலாமா? சட்டென குறுக்கிட்ட அப்பாவு.. பரபரப்பு
சென்னை: இன்று சட்டசபையில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தொடர்பான கேள்விகளுக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் பதில் அளித்து பேசினார். இதில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் பதில் அளித்தார்.
Recommended Video
தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு மே 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பெரியகருப்பன்
அவையில் பேசிய ஊரக வளர்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் கைவினை பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மாநில வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மூலம் இதற்காக முன்னணி இ காமர்ஸ் நிறுவனங்கள் உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் கைவினை பொருட்கள் ஏற்கனவே இதன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

என்ன சொன்னார்?
மேலும் பல மாவட்டங்களில் இந்த பொருட்களை விற்பனை செய்ய இணையம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒருங்கிணைந்த பிரத்யோக இணையதளம் உருவாக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலக பணிகளுக்கான பொருட்களையும் மகளிர் சுய உதவி குழுக்களிடம் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசின் ஜெம் இ மார்க்கெட் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது என்று குறிப்பிட்டார்.

வானதி சீனிவாசன்
இதையடுத்து இதற்கு பதில் அளித்து பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், மகளிர் சுயஉதவி குழுக்கள் வறுமையை ஒழிப்பதில் மிக முக்கிய பங்கு வகித்து வருகின்றன. பெண்களின் வருமானம் என்பது முழுக்க முழுக்க குடும்பத்திற்காக செலவு செய்யப்படுகிறது. குழந்தைகளின் கல்வி, குடும்ப செலவு என்று முழுக்க முழுக்க குடும்பத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆண்கள் வருமானம் கூட பீடி, சிகரெட், டாஸ்மாக் என்று வீணாகிவிடும்.

வானதி சீனிவாசன் கேள்வி
ஆனால் பெண்கள் கையில் கொடுக்கப்படும் பணம் அப்படி வீணாகாது, என்றார். இதையடுத்து வானதி சீனிவாசன் பேச்சுக்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏன் இப்படி ஆண்களை பற்றி பேசுகிறீர்கள். ஆண்கள் குடும்பத்திற்கு உழைக்கவில்லையா? என்று கேள்வி எழுப்பினர். கேள்வி நேரத்தில் இதை ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்டனர். இதையடுத்து குறுக்கிட்ட வானதி சீனிவாசன்.. நான் எல்லா ஆண்களையும் சொல்லவில்லை என்று குறிப்பிட்டார்.

சபாநாயகர் அப்பாவு
குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு கேள்வி நேரத்தில் இப்படி பேசலாமா.. இது பெண்கள் சுய உதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை ஆன்லைனில் உற்பத்தி செய்ய முடியுமா என்பதே கேள்வி. அதை பற்றி மட்டும் பேசுங்கள் என்று கூறினார். இதையடுத்து பேசிய வானதி சீனிவாசன்.. நான் எல்லா ஆண்களையும் சொல்லவில்லை. நீங்கள் கொதிக்க வேண்டாம் என்று எதிர்கட்சியினரை பார்த்து கூறினார். அதற்கு சபாநாயகர் அப்பாவு.. இங்கே யாரும் கொதிக்கவில்லை நீங்கள் கேள்வியை கேளுங்கள் என்று கூறினார்.

கேள்வி கேட்டார்
இதையடுத்து பேசிய வானதி சீனிவாசன், ஆன்லைன் மார்க்கெட்டில் விலைவாசி உயர்ந்து வருகிறது. 2016லேயே அரசு நிறுவனங்கள் மின்னணு வாயிலாக பொருட்களை வாங்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். அதன் மூலம் ஜெம் போர்டல் ஆர்டர் வேல்யூ உயர்ந்துள்ளது என்று கூறினார். அதற்கு அப்பாவு மீண்டும் கேள்விக்கு வாருங்கள்.. நாடாளுமன்றத்தில் பேச கூடிய விஷயங்களை சட்டசபையில் பேசுகிறீர்களே.. உங்கள் கேள்வியை கேளுங்களேன் என்று கூறினார்.

ஆன்லைன்
இதையடுத்து கேள்வி கேட்ட வானதி சீனிவாசன்.. ஆன்லைன் மூலம் சுயஉதவிக்குழுக்கள் பொருட்களை விற்பனை செய்ய எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது என்பதை தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்று கேட்டார். இதையடுத்து பேசிய அமைச்சர் 2016ல் ஒன்றிய அரசு கொண்டு வந்த ஜெம் திட்டம் பற்றி பாஜக எம்எல்ஏ கூறினார். நாங்கள் ஆட்சிக்கு வந்த 1 வருடத்தில் சுய உதவிக்குழுவின் மடி பஸார் டாட் காம் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது.

இ காமர்ஸ்
அவர்கள் விற்பனை செய்யும் பொருட்களை ஜெம் இணைய பக்கத்தில் பதிவேற்றும் பணிகளும் நடந்து வருகிறது. இதன் மூலம் அரசு அலுவலகங்கள் இந்த பொருட்களை வாங்க முடியும். மேலும் விருப்பம் உள்ள உதவி குழுக்கள் தங்கள் பொருட்களை வாங்கும் விதமாக தனியார் இ காமர்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அமேசான், பிளிப்கார்ட் மூலம் இந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த பொருட்கள் விற்பனை பற்றி பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன, என்று பதில் அளித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications