அந்த திட்டத்தை நிறுத்த வேண்டாம்.. முதல்வர் ஸ்டாலினுக்கு நேரடியாக கோரிக்கை வைத்த வானதி சீனிவாசன்
சென்னை: தமிழக மகளிருக்கு வழங்கும் 'இரு சக்கர வாகன' உதவித்தொகை நிறுத்தப்படும் எனும் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது என பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
முன்னதாக அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா இரு சக்கர வாகன திட்டத்துக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை என்று அமைச்சர் பெரிய கருப்பன் சட்டசபையில் செவ்வாய்கிழமை கூறியிருந்தார்
தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தொண்டாமுத்தூர் எஸ்.பி.வேலுமணி(அதிமுக) பேசும் போது, அதிமுக ஆட்சியில் அம்மா இரு சக்கர வாகன திட்டம் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான கொண்டு வரப்பட்டது.

எஸ்பி வேலுமணி கேள்வி
இத்திட்டம் தொடர்வது குறித்து 2021-22 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. இந்த திட்டத்தை அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் இந்த பட்ஜெட்டில் அம்மா உணவக திட்டத்தின் செலவினத்திற்காக நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.

அமைச்சர் பதில்
ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன் பேசும் போது, இந்த அரசு பொறுப்பேற்றதும், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் அறிவிக்கப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் நாங்கள் தெரிவித்திருந்தோம். அதன்படியே ஆட்சிக்கு வந்ததும், பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கும் வகையிலான திட்டம் அறிவிக்கப்பட்டது.

வரவேற்பு இல்லை
அதன்படியே பதவியேற்றதும் முதல்வர் மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை தொடங்கி வைத்தார். இது பெண்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். நீங்கள் கொண்டு வந்த இருசக்கர வாகன திட்டத்திற்கு மக்களிடம் வரவேற்பு இல்லை" இவ்வாறு அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.

மகளிர் பயணம்
நிதிநிலை அறிக்கையில் அம்மா இரு சக்கர வாகன திட்டத்தை தொடர்வது குறித்து அரசு எந்த தகவலும் வெளியிடாததால், அத்திட்டம் நிறுத்தப்படுவது உறுதியாகி உள்ளது. அனைத்து மகளிருக்கும் இலவச பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதால், இனி மகளிருக்கான அம்மா இருசக்கர வாகன திட்டம் செயல்படுத்தப்படாது என்றே சொல்லப்படுகிறது.

அரசுக்கு கோரிக்கை
இந்நிலையில் தமிழக மகளிருக்கு வழங்கும் 'இரு சக்கர வாகன' உதவித்தொகை நிறுத்தப்படும் எனும் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது என பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார். வாகன உதவி என்பதற்கு மேல், யாரையும் எதிர்பார்க்காமல், சார்ந்திராமல் வாழப் பழகும் பெண்கள் முன்னேற்றத்தின் 'இறக்கை'யாக பாருங்கள். திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளார்,.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications