சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவையில் கமலை எதிர்த்து வானதி சீனிவாசன்? ஆயிரம் விளக்கில் குஷ்பு? வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனை எதிர்த்து போட்டியிடுவார் என்று தகவல்கள் கூறுகின்றன.

நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சி அறிவிக்கும் முன்பே வேட்பு மனு தாக்கல் செய்த நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் உலா வருகின்றன.

பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது?

பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது?

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாஜகவுக்கு 20 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் பாஜக இன்னும் வேட்பாளர் பட்டியல் வெளியிடவில்லை. பொதுவாக மாநில வேட்பாளர் பட்டியலையும் டெல்லி பாஜகதான் முடிவு செய்யும்.

பாஜக தேர்தல் குழு கூட்டம்

பாஜக தேர்தல் குழு கூட்டம்

இந்த நிலையில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநில வேட்பாளர்களை இறுதி செய்யும் பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 கமலை எதிர்த்து வானதி சீனிவாசன்?

கமலை எதிர்த்து வானதி சீனிவாசன்?

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகள் வெளி வந்துள்ளன. அதாவது பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனை எதிர்த்து போட்டியிடுவார் என்று தகவல்கள் கூறுகின்றன. நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நயினார் நாகேந்திரன் நெல்லை?

நயினார் நாகேந்திரன் நெல்லை?

கட்சி அறிவிக்கும் முன்பே வேட்பு மனு தாக்கல் செய்த நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் உலா வருகின்றன. தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
According to reports, BJP national women's team leader Vandi Srinivasan from Tamil Nadu will contest against Kamal Haasan in the Coimbatore South constituency
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X